முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரி, தனது குடும்பத்தினருடன் கருணாநிதி நினைவிடம் வந்தார். குடும்பத்தினருடன் அவர் மறைந்த தந்தையின் நினைவிடத்தில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், “கருணாநிதியின் விசுவாசமான உடன்பிறப்புகள் என் பக்கம் தான் உள்ளனர். என்னுடைய ஆதங்கத்தை அப்பாவிடம் தெரிவித்துள்ளேன். நான் திமுகவில் இல்லை, செயற்குழு குறித்து எதுவும் கூற முடியாது. என்னுடைய ஆதங்கம் குடும்பத்தை பற்றியது அல்ல, கட்சியைப் பற்றியது” என்றார்.
பின்னர் கருணாநிதி நினைவிடத்தில் இருந்து நேராக கோபாலபுரம் சென்றார். கோபாலபுரம் இல்லத்தில் தான் மு.க. ஸ்டாலினும் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.