மதுக்கூரை சேர்ந்த திருமுருகனும் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பியர் பூட்டரும் ((Pierre boutter)) பிரான்ஸில் 5 ஆண்டுகளாக ஒன்றாக கல்லூரியில் படித்துள்ளனர். அந்த நட்பில் திருமுருகனைப் பார்க்க இந்தியா வந்த பியர் பூட்டர், ஊரைச் சுற்றிக்காட்டுமாறு திருமுருகனிடம் கேட்டுள்ளார். இதனையடுத்து கடந்த 5 ஆம் தேதி மன்னார்குடி பெரிய கோவிலுக்குச் சென்ற இருவரும் ஆவிக்கோட்டை திரும்பி மது அருந்தியுள்ளனர். அங்கு, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியுள்ளது. அதில் தலையில் காயமடைந்த, பியர் பூட்டர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதனையடுத்து, திருமுருகன் அவரது உடலை துண்டு துண்டாக வெட்டி எரித்த திருமுருகன், அதனை சாக்குப் பையில் வாய்க்கால் ஒன்றில் வீசி சென்றுள்ளார்.
பின்னர் ஆறு நாள்களுக்கு பின்னர் போலீஸிடம் சரணடைந்துள்ளார்.
Source : Polimer News