ஆளுநர் மாளிகையில் நடந்த தலைமை நீதிபதி பதவியேற்பு விழாவில், நீதிபதிகளை சரியாக உபசரிக்காமல் மரபுகள் மீறப்பட்டுள்ளதாக நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் அதிருப்தி தெருவித்துள்ளார். தலைமை நீதிபதி பதவி ஏற்பு நிகழ்ச்சியில் அரசியலமைப்பு படி நிலைகளை மீறி நீதிபதிகளுக்கு 5வது வரிசை ஒதுக்கப்பட்டதாகவும், அது, தமிழக அமைச்சர்கள், உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு பின்னால் உள்ள வரிசைகள் நீதிபதிகளுக்கு வழங்கப்பட்டிருந்தது என்றும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.