கேரள முதலமைச்சரின் நிவாரண நிதிக்குத் திமுக அறக்கட்டளை சார்பில் ஒரு கோடி ரூபாயை மு.க.ஸ்டாலின் வழங்கியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கேரள மாநிலத்தில் வரலாறு காணாத வெள்ளப்பெருக்கால் பேரழிவு ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். மழை வெள்ளத்தால் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதையும், ஆயிரக்கணக்கானோர் வீடிழந்துள்ளதையும், பல கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் சேதமடைந்துள்ளதையும் சுட்டிக்காட்டியுள்ளார். பாதிப்புக்கு ஆளான மக்களுக்கு ஆதரவு அளித்திடும் நோக்கில் திமுக அறக்கட்டளை சார்பில் கேரள முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு ஒரு கோடி ரூபாயைத் தான் வழங்கியதாகக் குறிப்பிட்டுள்ளார்.
பெருவெள்ளத்தால் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலையும், பாதிக்கப்பட்டோருக்கு ஆறுதலையும் திமுக சார்பில் தெரிவித்துக்கொள்வதாகவும் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.