சட்டவிரோத தொலைபேசி இணைப்பக முறைகேடு வழக்கில், வரும் 17ஆம் தேதி மாறன் சகோதரர்கள் நேரில் ஆஜராக சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அன்றைய தினம் அவர்கள் மீது குற்றச்சாட்டும் பதிவு செய்யப்படும் என நீதிமன்றம் கூறியுள்ளது.
முன்னதாக, இவ்வழக்கில் மாறன் சகோதரர்களுக்கு எதிராக போதிய ஆதாரம் இல்லையெனக் கூறி சிபிஐ நீதிமன்றம் வழக்கை தள்ளுபடி செய்த நிலையில், அதனை எதிர்த்து, சிபிஐ தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அதனை விசாரித்த உயர் நீதிமன்றம், மாறன் சகோதரர்களுக்கு எதிராக போதிய ஆதாரங்கள் இருப்பதாக கூறியது.
இதனையடுத்து, சிபிஐ நீதிமன்றம் தொடர்ந்து இவ்வழக்கை விசாரிக்க உள்ளது.