சென்னையின் முக்கிய குடிநீர் ஆதாரங்களில் ஒன்றான வீராணம் ஏரி தனது முழு கொள்ளளவை எட்டி உள்ளது.
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள வீராணம் ஏரி தனது மொத்த நீர்மட்டமான 47.5 அடியில் 46.7 அடியை எட்டி உள்ளது. ஏரிக்கு விநாடிக்கு 950 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் சென்னைக்கு குடிநீருக்காக வீராணம் ஏரியில் இருந்து குழாய் மூலம் 55 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. ஏரிக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் குடிநீருக்காக திறக்கப்படும் நீரின் அளவும் இனி வரும் நாட்களில் அதிகரிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.