தமிழகத்திற்கு கூடுதல் உரம்: மத்திய அரசு ஒப்புதல்

Forums Inmathi News தமிழகத்திற்கு கூடுதல் உரம்: மத்திய அரசு ஒப்புதல்

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #10699
    Kalyanaraman M
    Keymaster

    தமிழகத்திற்கு தேவையான கூடுதல் உரங்களை வழங்க, மத்திய அரசு ஒப்புதல் தெரிவித்துள்ளது.

    வேளாண் துறையிடம், தற்போது, லட்சம் டன் யூரியா, 54 ஆயிரம் டன் பொட்டாசியம், 1.25 லட்சம் டன் கூட்டு உரங்கள், 53 ஆயிரம் டன் டி.ஏ.பி., கையிருப்பில் உள்ளது. இந்த மாதத்திற்கு கூடுதலாக, ஒரு லட்சம் டன் யூரியா, 60 ஆயிரம் டன் பொட்டாசியம், 90 ஆயிரம் டன் கூட்டு உரங்கள், 50 ஆயிரம் டன் டி.ஏ.பி., வேண்டும் என, மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்ததாக வேளாண்துறை உரங்கள் பிரிவு அதிகாரி  தெரிவித்தார். இதை, மத்திய அரசு உடனடியாக ஏற்றது. காரைக்கால் துறைமுகத்தில் இறக்குமதி செய்யப்பட்டுள்ள, 80 ஆயிரம் டன் யூரியாவை உடனே எடுத்துக்கொள்ள, அனுமதி வழங்கி உள்ளது. மீதமுள்ள உர வகைகளை, விரைவில் வழங்குவதாகவும் தெரிவித்துள்ளது. இதனால், விவசாயிகளுக்கு, தட்டுப்பாடின்றி உரங்கள் வழங்க முடியும் என்று கூறினார்.

Viewing 1 post (of 1 total)
  • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This