மேட்டூர் அணை இரண்டாவது முறையாக முழுகொள்ளளவை எட்டியுள்ளது. கர்நாடகப் பகுதிகளில் கன மழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது.
இந்த ஆண்டு இது இரண்டாவது முறையாக முழு கொள்ளளவான 120 அடியை எட்டியுள்ளது. இதற்கு முன்னர் முன்னர் 2004 இல் 4 முறையும், 2005 இல் 5 முறையும் ஒரே ஆண்டில் கொள்ளளவை எட்டியது குறிப்பிடத்தக்கது.