குமரி, நெல்லை, கோவை ஆகிய 3 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு பருவமழை காரணமாக கேரளாவை ஒட்டியுள்ள குமரி, கோவையில் மழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்துள்ளது.
குமரி மாவட்டத்தில் மணிக்கு 35 முதல் 55 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடலோர பகுதிகளில் பலத்த காற்று வீசும் என்பதால், மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.