ஒரே நாளில் 27 தமிழக மீனவர்களை கைது செய்த இலங்கை கடற்படை

Forums Communities Fishermen ஒரே நாளில் 27 தமிழக மீனவர்களை கைது செய்த இலங்கை கடற்படை

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #10669
    Inmathi Staff
    Moderator

    இன்று மாலை நெடுந்தீவுக்கு தென் கிழக்கே இலங்கை கடற்படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர் அப்போது இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்டு கொண்டிருந்த இராமநாதபுரம் மற்றும் தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த 27 தமிழக மீனவர்களை கைது செய்த கடற்படையினர் நான்கு நாட்டுபடகை பறிமுதல் செய்து காரை நகர் கடற்படை முகாமிற்கு அழைத்து சென்று விசாரனை நடத்தினர் விசாரணையில் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் கூறல்மீன்கள் அதிகளவில் இந்த பகுதி இருந்ததால் அதனை பிடித்து கொண்டிருந்த போது காற்றின் வேகம் காரணமாக எல்லைதாண்டி வந்ததாக கைது செய்யப்பட்ட மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

    விசாரணைக்கு பின்னர் நாளை காலை மீனவர்கள் அனைவரையும் யாழ்ப்பாணம் மீன் வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கவுள்ளதாக இலங்கை கடற்படை வட்டார தகவல் தெரிவிக்கின்றன.

    ஒரே நாளில் 27 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்த சம்பவம் தமிழக கடலோர மீனவ கிராமங்களில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

Viewing 1 post (of 1 total)
  • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This