ஒரு ஏக்கரில் 100 டன் கரும்பு சாகுபடி…எப்படி?

Forums Communities Farmers ஒரு ஏக்கரில் 100 டன் கரும்பு சாகுபடி…எப்படி?

Viewing 1 post (of 1 total)
 • Author
  Posts
 • #10660
  Inmathi Staff
  Moderator

  வெள்ளோடு விவசாயி ஒரு ஏக்கரில், 100 டன் கரும்பு மகசூல் செய்துள்ளார். ஈரோட்டை அடுத்த வெள்ளோடு வேலம்பாளையம் பகுதியை சேர்ந்த விவசாயி நடராஜன், 67. இவர் கோ-86032 கரும்பு ரகத்தில் திசு வளர்ப்பு முறையில் உருவாக்கப்பட்ட கரும்பு நாற்றின் மூலம் ஏக்கருக்கு, 100 டன் கரும்பு மகசூல் செய்து சாதனை படைத்துள்ளார். இதுகுறித்து நடராஜன் கூறியதாவது: கரும்பு நாற்றுக்கள் ஏக்கருக்கு, 6,000 வீதம், 4 அடி பாரில், 2 அடி இடைவெளியில் நடவு செய்யப்பட்டது. நடவுக்கு முன் பசுந்தாள் உர பயிரான தக்கைப்பூண்டு, 30 கிலோ விதைத்து, 3வது மாதத்தில் ரோட்டா வேட்டர் மற்றும் கலப்பை மூலம் உழவு செய்து, 4 அடி பார் அமைக்கப்பட்டது. டி.ஏ.பி, காம்ப்ளக்ஸ், பொட்டாஷ், யூரியா ஆகியன, 60, 100, 140வது நாளில் இடப்பட்டது. 150 வது நாளில் தோகை உரிக்கப்பட்டது. இளம்பயிரில் முயல் சேதத்தை தடுக்க கருவாடு மற்றும் முட்டை கலவை தெளிக்கப்பட்டது. குருத்துப்புழு, இடைக்கணு புழு தாக்குதலை கட்டுப்படுத்த நான்கு முறை ஒட்டுண்ணி விடப்பட்டது. கரும்பு நாற்று நடவு செய்த, 12 மாதத்தில் அறுவடை செய்யப்பட்டது. நீர்பாசனம் பார் முறையில் பாய்ச்சப்பட்டது. மொடக்குறிச்சி விவசாயி, 93 டன் கரும்பு மகசூல் எடுத்ததே சாதனையாக இருந்தது. அதைவிட அதிகமாக, 100 டன் கரும்பு மகசூல் செய்தது மகிழ்ச்சியளிக்கிறது

Viewing 1 post (of 1 total)
 • கருத்துக்களத்தில் கருத்திடுவதற்கு பதிவு செய்யவும்.

Pin It on Pinterest

Share This