கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் 14 பேர் சென்ற விசைப்படகை மோதி விபத்தை ஏற்படுத்திவிட்டு கடலில் தத்தளித்த மீனவர்களை மீட்க எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மாயமான இந்திய அரசின் தேஷ் சக்தி கப்பலை பறிமுதல் செய்து மாலுமி மீது வழக்குப்பதிவு செய்து குற்றநடவடிக்கை எடுக்கவும், மாயமான மீனவர்களை உயிரோடு மீட்கவும் உயிரிழந்த மீனவர்களுக்கு தலா ஒருகோடி ரூபாய் இழப்பீடு வழங்கவும் வலியுறுத்தி மீனவர்களின் குடும்பத்தினரும் ராமன்துறை ஊர்மக்களும் இணைந்து காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் நடந்துவருகிறது.