இன்று முதல் இரண்டாம் கட்ட ஆன்லைன் பதிவு சேவை தொடக்கம்

Forums Inmathi News இன்று முதல் இரண்டாம் கட்ட ஆன்லைன் பதிவு சேவை தொடக்கம்

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #10609
    Kalyanaraman M
    Keymaster

    தமிழகத்தில் ஆன்லைன் முறையில் பத்திரப்பதிவு நடப்பது போல திருமணம், சங்கங்கள் தொடர்பான பதிவுகளும் சோதனை ரீதியாக இன்று முதல் ஆன்லைன் முறைக்கு மாற்றப்படுகின்றன.தமிழகத்தில் பத்திரப் பதிவுகள் அனைத்தும் பிப்ரவரி 12 முதல் ஆன்லைன் முறைக்கு மாற்றப்பட்டன.இதற்காக டி.சி.எஸ்., நிறுவன உதவியுடன் ‘ஸ்டார் 2.0’ என்ற மென் பொருளை பதிவுத்துறைதயாரித்தது. இதில் முதற்கட்டமாக சொத்துவிற்பனை, பத்திரப்பதிவு உள்ளிட்ட சில பணிகள் மட்டுமே மேற்கொள்ளப்பட்டன.

    தற்போது, ஆன்லைன் திட்டத்தில் இரண்டாம்கட்ட பணிகளை பதிவுத்துறை துவக்கியுள்ளது. இதன்படி ஆன்லைன் முறையில் அனைத்து வகை திருமணம், பிறப்பு – இறப்பு சான்றிதழ்வழங்கல், சீட்டு, சங்கம், கூட்டு நிறுவனம்உள்ளிட்டவற்றை பதிவு செய்வதற்கான பயிற்சி சார்- பதிவாளர்களுக்கு அளிக்கப்பட்டது.பதிவுகள் அனைத்தும் இன்று முதல் சோதனைரீதியில் துவக்கப்படுகின்றன.

Viewing 1 post (of 1 total)
  • கருத்துக்களத்தில் கருத்திடுவதற்கு பதிவு செய்யவும்.

Pin It on Pinterest

Share This