கடந்த இரண்டு நாட்களாக காஞ்சிபுரம் மாவட்டத்தின் ஒரு சில இடங்களிலும், திருவள்ளூர் மாவட்டத்தின் ஒரு சில இடங்களிலும் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்து வருகிறது. நேற்று இரவு முதல் கடல் வழக்கத்திற்கு மாறாக கடும் சீற்றத்துடன் காணப்பட்டது. கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள மீனவ கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள் மட்டும் மீன் பிடிக்க கடலுக்குச் சென்று காற்று அதிகமாக வீசியதால் உடனடியாக கரை திரும்பினர்.
அதிக கடல் சீற்றத்தினால் அலை உயரமாக எழும்பியது. இதையடுத்து கடல் நீர் கரையில் அளவுக்கதிகமாக உட்புகுந்தது. இதனால் கரையோரம் நிறுத்தப்பட்டிருந்த படகுகள் ஒன்றோடொன்று மோதி சேதமடைந்தன. இதையடுத்து மீனவர்கள் தங்களது படகுகளை கயிறு கட்டி இழுத்து பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு சென்றனர்