உயிர் உரம் டிரைக்கோடெர்மா விரிடியின் அற்புத பயன்கள்!

Forums Communities Farmers உயிர் உரம் டிரைக்கோடெர்மா விரிடியின் அற்புத பயன்கள்!

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #10550
    Inmathi Staff
    Moderator

    டிரைக்கோடெர்மா விரிடினா என்றால் என்ன?
    பயிர்களில் மண், நீர் விதையின் மூலம் பறவும் அழுகல் மற்றும் வாடல் நோய்களை கட்டுப்படுத்தும் இயற்கை பூஞ்சானக்கொல்லியாகும்.
    டிரைக்கோடெர்மா விரிடியின் பயன்கள்

    டிரைக்கோடெர்மா விரிடி நோய்களை உண்டாக்கும் பூஞ்சானங்களின் வளர்ச்சியை கட்டுப்படுத்தி வேருக்கு பாதுகாப்பு கவசமாக விளங்குகிறது. இதனை எல்லா பயிர்களுக்கும் பயன்படுத்தலாம்.

    டிரைக்கோடெர்மா விரிடியை பயன்படுத்துவதால் ஏற்படும் நன்மைகள்

    பயிர்களில் உண்டாகும் வேரழுகல், நாற்றழுகல், வாடல் நோய்களை கட்டுப்படுத்தும் .பயிர்களுக்குத் தேவையான( ஹார்மோன்கள் ) உற்பத்தி செய்கிறது

    மண்ணில் உள்ள மக்காத குப்பைகளை எளிதாக, விரைவாக மக்க வைத்து உரமாக்குகின்றன. வேரின் வளர்ச்சியை துரிதப்படுத்துகிறது. இதனால் வேரின் செயல்திறன் அதிரிக்கிறது.

    டிரைக்கோடெர்மா விரிடியை எந்தெந்த வகைகளில் பயன்படுத்தலாம்?

    அடியுரமாக போடலாம், விதைநேர்த்தி செய்யலாம், தண்ணீரில் கலந்து ஊற்றலாம்

    டிரைக்கோடெர்மா விரிடியை விதை நேர்த்தி செய்வது எப்படி என்று பார்க்கலாமா?

    ஒரு கிலோ விதைக்கு டிரைக்கோடெர்மா விரிடியை 10 கிராம், நீர் தெளித்து கலந்து அரைமணிநேரம் நிழலில் உளர்த்தி பிறகு நடவு செய்யலாம்.

    டிரைக்கோடெர்மா விரிடியை அடியுரமாக எவ்வாறு போடாலாம் என்று பார்க்கலாமா?

    டிரைக்கோடெர்மா விரிடி ஒரு ஏக்கருக்கு 2 முதல் 3 கிலோவை மண்புழு உரம் அல்லது இயற்கை உரம் ( சாணம்; உரம்) 100 கிலோவுடன் கலந்து 10- 15 நாட்கள் நிழலில் வைத்துப் பிறகு நிழத்தில் ஈரம் இருக்கும் பொழுது அடியுரமாக போடலாம்.

    டிரைக்கோடெர்மா விரிடியை ஒரு கிலோவை 100 லிட்டர் நீரில் கரைத்து வேர்பகுதியில் ஊற்றலாம்.

Viewing 1 post (of 1 total)
  • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This