எலிகளை கட்டுப்படுத்த எளிய வழிகள்!

Forums Communities Farmers எலிகளை கட்டுப்படுத்த எளிய வழிகள்!

Viewing 1 post (of 1 total)
 • Author
  Posts
 • #10534
  Inmathi Staff
  Moderator

  விவசாயத்தில் பூச்சி தாக்குதல் என்று எடுத்துக்கொண்டால், அவற்றை கட்டுப்படுத்த பல வழிகள் உள்ளது. ஆனால் தானிய பயிர்களை மட்டுமே அதிகமாக தாக்கும் எலிகளின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்த விவசாயிகள் அதிகம் கஷ்டப்படுவார்கள். எலிகளை கட்டுப்படுத்தும் சில வழிமுறைகள் இதோ…

  எலி தாக்குதல் :

  நெல், மக்கசோளம், கரும்பு, பயிறுவகைகள், பருத்தி, கடலை போன்ற வயல்களில் எலிகளின் தாக்குதல் அதிகமாக இருக்கும்.
  எலிகள் தாக்கப்பட்ட பயிர்களின் நாற்றுகள் துண்டுகளாய் வெட்டப்பட்டது போல் காணப்படும்.
  மேலும் நெற்பயிர் வயலின் கரையோரங்களில் ஆரம்ப நாட்களில் சிறுசிறு பொந்துகள் ஆங்காங்கே காணப்படும். வளர்ச்சியடைந்த நெற்பயிர்களையோ அல்லது முதிர்ச்சியடைந்த நெல்மணிகளை கொhpத்து தின்றது போல காணப்படும்.
  பொதுவாக நெல் வயல்களில் உள்ள எலிகள் கருப்பு அல்லது பழுப்பு நிறத்தில் காணப்படும்.
  தடுக்கும் முறைகள் :

  வயல்களில் முதலில் உழவுக்கு முன்பு ஆட்டுப்பட்டி அமைத்தால், அந்த வயல்களில் எலி வரவே வராது.

  ஒரே வயலில் தொடர்ந்து தானிய பொருட்களை மட்டும் சாகுபடி செய்யாமல், பு ச்செடிகள், மரவகைகள் என மாற்றி சாகுபடி செய்ய வேண்டும். மேலும் வைக்கோல் போர்களை வயலுக்கு அருகில் அமைக்காமல் இருக்க வேண்டும்.

  வயல்களில் தெர்மோகோல் துண்டுகளை சீனிப்பாகு அல்லது சர்க்கரைப்பாகில் தோய்த்து ஆங்காங்கே வைத்தாலும் எலிகள் அவற்றை உண்டு உணவு செரிக்காமல் இறந்து போகும்.

  வரப்புகளை அவ்வப்போது சீராக்குதல், கோடையில் வரப்பை வெட்டி அழிப்பது, எலி வலைக்குள் வைக்கோல் புகை மூட்டம் செய்து களிமண்ணால் வலை முழுவதும் பூசுவது, எலி பொந்துகள் சுவர் அருகில் இருப்பின் கல், சிமெண்ட், வைத்து பூசுதல் போன்றவைகளை பின்பற்றலாம்.

  இரவு பறவையான ஆந்தைகள் வயல்களில் வந்து அமர்ந்து எலிகளை பிடிப்பதற்கு ஏதுவாக காலிப்பானைகள் அல்லது மண்சட்டிகளை தலைகீழாக கவிழ்த்து வு வடிவில் குச்சிகளை வைத்து அவற்றில் கட்டி வைக்கலாம்.

  நெல் வயலில் எலியை கட்டுப்படுத்த சணப்பு பூவை சிறிய துண்டுகளாக்கி, அதை பரவலாக தூவி விட்டால் அதிலிருந்து வரும் வாடையினால் எலிகள் ஓடி விடும்.
  எலி எண்ணிக்கையை குறைக்க ஒவ்வொரு பயிர் அறுவடைக்குப்பின்பும், எலி வலையைத்தோண்டி எலிகளை அழிக்க வேண்டும்.
   

Viewing 1 post (of 1 total)
 • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This