தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் நிர்வாக பணிகளை மேற்கொள்ள தேசிய பசுமை தீர்ப்பாயம் அனுமதி வழங்கியுள்ளது. ஆனால், உற்பத்தி மற்றும் பராமரிப்பு பணிகளை செய்யக்கூடாது எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
நிர்வாக பணிகளை மேற்கொள்ள 30 நாட்கள் அனுமதி கேட்டும், குழு அமைத்து கண்காணிக்கவும் வேதாந்தா நிறுவனம் சார்பில் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் மனு அளிக்கப்பட்டது. குறைந்த பட்ச பராமரிப்பு பணிக்காக மின் இணைப்பு வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடப்பட்டது.
ஆனால், நிர்வாக பணிகளை அனுமதித்தால் ஆவணங்களை அழிக்க வாய்ப்பு உள்ளதாக தமிழக அரசு சார்பில் வாதாடப்பட்டது. இதன்பின்னர், விசாரணையை பசுமை தீர்ப்பாயம் ஆகஸ்ட் 20க்கு ஒத்திவைத்தது.