ஸ்ரீரங்கம் கோயில் நம்பெருமாள் உற்சவர் சிலை கடத்தல் தொடர்பாக, 2017 அக்டோபரில் அளித்த புகாரை விசாரித்து, 6 வாரத்திற்குள் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. ஆகம விதிப்படி, பொன். மாணிக்கவேல் விசாரணை நடத்தி அறிக்கை அளிக்கவும் ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
சிலை கடத்தல் தொடர்பான வழக்குகளை சிபிஐ விசாரணைக்கு மாற்ற தமிழக அரசு முடிவு செய்தது. இதனை எதிர்த்து வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் தொடர்ந்த முறையீட்டை விசாரித்த கோர்ட், சிபிஐ விசாரணைக்கு தடை விதித்ததுடன், மனுவுக்கு பதிலளிக்கவும் தமிழக அரசுக்கு உத்தரவு பிறப்பித்தது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, பதிலளிக்க தமிழக அரசு கால அவகாசம் கோரியதை தொடர்ந்து, வழக்கு அடுத்த வாரத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டது.