சுறுக்குவலைகளை அனுமதிக்க முடியாது சென்னை மீனவர்கள் ஆட்சேபனை

Forums Communities Fishermen சுறுக்குவலைகளை அனுமதிக்க முடியாது சென்னை மீனவர்கள் ஆட்சேபனை

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #10213
    Inmathi Staff
    Moderator

    கடலூர்   மற்றும்   அதன்   தெற்கு   பகுதிகளில்  இருந்து  சென்னை  கடல் பகுதிக்கு  வந்த    சுறுக்கு  வலையை    பயன்படுத்தி,   மீன்பிடிக்கும்    நடவடிக்கைக்கு   சென்னை    மீனவர்கள்    கடும்    எதிர்ப்பு    தெரிவித்து    வருகின்றனர்.
    சென்னை,     திருவள்ளூர்,    காஞ்சிபுரம்   மாவட்ட    மீனவர்கள்      சுருக்கு   வலை    பயன்படுத்தி   மீன்பிடிப்பதில்லை.      சுருக்கு    வலை    பயன்படுத்தி   மீன்   பிடிப்பதால்    மீன்    வளம்   அடியோடு    அழிந்து  விடும்   என்று  கருதி   தமிழக   அரசு   2000ம்   ஆண்டின்   தடை விதித்து   உத்தரவு பிறப்பித்துள்ளது.

    அதை  மீறி  சில  மாவட்டங்களைச்    சேர்ந்த   சில  மீனவர்கள்   கூட்டம்  கூட்டமாக  சேர்ந்து   சுருக்கு   வலை   பயன்படுத்தி    மீன்   பிடித்து   வருகின்றனர். ஆங்காங்கே   பெரும்பாலான   மீனவர்கள்    ஆட்சேபனையும்   எதிர்ப்பும்   தெரிவித்து  வருகின்றனர்.

    இந்நிலையில்    சமீபகாலங்களில்   கடலூர்   மற்றும்   அதன்  தெற்கு   பகுதி   மீனவர்களில்    சிலர்   சென்னை   கடல்  பகுதியில்   சுறுக்கு   வலை   கொண்டு   மீன்  பிடித்தனர். அவர்களை சென்னை  மீனவர்கள்  விரட்டி   அடித்தனர் . மீண்டும்    சென்னை   கடல்   பகுதிக்கு   அவர்கள்   வந்தால்   கடும்   விளைவுகளை   சந்திக்க   நேரிடும்  என்று   மீனவர்கள்  எச்சரித்துள்ளனர்.

Viewing 1 post (of 1 total)
  • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This