கேரளாவில் மீன் ஏலம் விற்பனை, தரக்கட்டுப்பாட்டுக்கான புதிய சட்டம்.

Forums Communities Fishermen கேரளாவில் மீன் ஏலம் விற்பனை, தரக்கட்டுப்பாட்டுக்கான புதிய சட்டம்.

Viewing 1 post (of 1 total)
 • Author
  Posts
 • #10211
  Inmathi Staff
  Moderator

  கேரளாவில்  இடைத்தரகர்களின்  சுரண்டலில்  இருந்து  மீட்டு மீனவர்களுக்கு  நியாமான  விலையும்,   பொதுமக்களுக்கு  கலப்படமில்லா மீன்களையும்   கிடைக்கச்  செய்யும்  வகையில்  புதிய  சட்டம்  ஒன்றை கொண்டுவர  கேரள   அரசு  முடிவு  செய்துள்ளது.

  கேரள  மீன்  ஏலம்,   விற்பனை  மற்றும்  தரக்கட்டுப்பாடு  சட்டம்  என்ற பெயரில்  சட்டத்திற்கு   சமீபத்தில்   கேரள  மாநில  அமைச்சரவையில்  ஒப்புதல்   அளிக்கப்பட்டது .

  மீன்   ஏலத்தை  நவீனமயமாக்கி   மீன் பிடி  துறை  முகங்கள்  மற்றும்  மீன்  இறங்கு  தளங்களில்  இடைத்தரகர்கள்  கட்டுப்பாட்டில்  இருந்து  மீனவர்களை  மீட்பதுடன்  இரசாயன   கலப்படம்   இல்லாத  மீன்களை மக்களுக்கு  வழங்க  இச்சட்டம்  வகை செய்யும்.

  மீள முடியாத   கடனாளிகளாகவே    வைத்திருக்கும்     இடைத்தரகர்கள்  பிடியில்  இருந்து  மீனவர்களை  மீட்க   கேரள  அரசு தொடர்ச்சியாக  எடுத்து  வரும்  நடவடிக்கைகளின்  ஒரு  பகுதியாக  இச்சட்டம்  கொண்டு வரப்படுகிறது.

  இச்சட்டத்தை   நடை  முறைப்படுத்துவதன்  மூலம்   பாரம்பரிய  மீன்பிடி துறைமுகங்களை   ஆதிக்கவாதிகளின்  பிடியில்  இருந்து  விடுவிக்க முடியும்  என்று  கேரள  அரசு  எண்ணுகிறது.

  மாவட்ட  ஆட்சித்தலைவர்  தலைமையிலான  புதிய  குழுவின் மேற்பார்வையில்  வெளிப்படைத்தன்மையுடனான   ஏலம்  இந்த  புதிய சட்டத்தின்  மூலம்  நடைமுறைப்படுத்தப்படும்.

  இத்திட்டத்தின்  மூலம்  மீனவர்  கூட்டுறவு  சம்மேளனம் வெளிப்படைத் தன்மையான  ஏல  நடைமுறைக்கு  பெரும்  பங்காற்றும்.

  அதே  போல்  சாதாரண   மக்களும்  குறைந்த  அளவு  மீன்களை         நியாயமான   விலையில்  வாங்குவதற்கும்  வழிவகை  செய்யும்  வகையில்  உரிய       நடவடிக்கை  எடுக்கப்பட்டு  வருவதாக  மீன் வளத்துறை  அதிகாரிகள்  தெரிவிக்கின்றனர்.

Viewing 1 post (of 1 total)
 • கருத்துக்களத்தில் கருத்திடுவதற்கு பதிவு செய்யவும்.

Pin It on Pinterest

Share This