சிலை கடத்தல் வழக்கை சிபிஐக்கு மாற்ற தமிழக அரசு பிறப்பித்த அரசாணை ரத்து

Forums Inmathi News சிலை கடத்தல் வழக்கை சிபிஐக்கு மாற்ற தமிழக அரசு பிறப்பித்த அரசாணை ரத்து

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #10175
    Kalyanaraman M
    Keymaster

    சென்னை உயர்த்நீதிமன்றம் அதிரடி

    சிலை கடத்த வழக்குகளை, சிலை கடத்தல் பிரிவின் ஐஜி பொன் மாணிக்கவேல் கவனித்து வருகிறார். அவர் பல்வேறு இடங்களில் திருட்டுபோன சிலைகளை கண்டுபித்தும் வருகிறார்.

    இந்தநிலையில் ஐஜி பொன்மாணிக்கவேலுக்கம் தமிழக அரசுக்கும் நடுவே இணக்கமான சூழல் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக சிலை கடத்தல் வழக்கை  சிபிஐ வசம் வழக்கை ஒப்படைக்க தமிழக அரசு தானாக முன்வந்தது. அதற்காக அரசாணையும் பிறப்பித்தது.

    இந்தநிலையில் தமிழக அரசு பிறப்பித்துள்ள அரசாணைக்கு தடை விதிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் வழக்கு தொடுத்தார். அந்த வழக்கு மீதான விசாரணை நேற்று நீதிபதி மகாதேவன் அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

    விசாரணையின் போது வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் கூறுகையில், ஐஜி பொன்மாணிக்கவேல் சிலை கடத்தல் வழங்கை விசாரித்து வரும் நிலையில், இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது உள்நோக்கம் கொண்டதாக உள்ளது’ என்றார்.

    வாதத்தின் இறுதியில் நீதிபதி மகாதேவன் அமர்வு, ‘ சிலை கடத்தல் வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற தமிழக அரசு பிறப்பித்துள்ள அரசாணை ரத்து செய்யப்படுவதாக தீர்ப்பு அளித்தார்.

Viewing 1 post (of 1 total)
  • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This