நேபாளத்தில் உள்ள கைலாஷ் பகுதிக்கு ஆன்மிக சுற்றுலா சென்ற 200 க்கும் மேற்பட்ட பக்தர்கள் மோசமான வானிலையால் சொந்த ஊர் திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர். இதில் 25 பேர் திருச்செங்கோடு, தர்மபுரி , நாமக்கல் பகுதியை சேர்ந்தவர்கள் என தெரிய வந்துள்ளது. வானிலை சீரான பின்னரே அவர்களை மீட்க முடியும் என்ற சூழ்நிலை காணப்படுகிறது.