சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக நாளை பதவியேற்க உள்ள சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதியாக இருந்த இந்திரா பானர்ஜிக்கு இன்று சென்னை ஐகோர்ட் வளாகத்தில் வழியனுப்பு விழா நடந்தது. அப்போது உரையாற்றிய இந்திரா பானர்ஜி, நான் சுப்ரீம் கோர்ட் சென்றாலும் தமிழகத்தை மறக்க மாட்டேன். சென்னை ஐகோர்ட் வரலாற்று சிறப்புமிக்கது. சென்னை ஐகோர்ட்டில் பணியாற்றும் வழக்கறிஞர்கள் திறமைமிக்கவர்கள் என்றார்.