பஞ்சாப் மற்றும் சண்டிகர் பகுதிகளில் அம்மாநில மீன் வளம் மற்றும் உணவுப் பாதுகாப்புத் துறையினர் நடத்திய ஆய்வில் பார்மாலின் கலந்த மீன்கள் விற்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த மீன்கள் பெரும்பாலும் மும்பையிலிருந்து கொண்டுவரப்பட்டவை எனவும், அவை மூன்று நாள்கள் ரயிலில் பயணித்து பஞ்சாபிற்கு வருகிறது எனக் கூறுகின்றனர் அங்குள்ள அதிகாரிகள்.
பஞ்சாப் பல்கலைகழகத்தின் மீன் மற்றும் மீன் வளப் பேராசிரியர் ஒன்சார்ஜின் பராய்க் கூறுகையில் பார்மாலின் மிக மோசமானது. 5 % பார்மாலினும், 95% தண்ணீரும் சேர்த்தால் 100 ஆண்டுகள் வரை மீன்களை பாதுகாக்க முடியும். இது 30 மில்லி லிட்டர் ஒரு மனிதன் சாப்பிட்டுவிட்டால் ஒவ்வாமை மூச்சுக்குழல் அயர்ச்சி, நுரையீரல் அயர்ச்சி மற்றும் புற்று நோய்கள் வர வாய்ப்பிருக்கிறது. இதனால் சுவாசக்குழாய், நுரையீரல்,கல்லீரல்,சிறுநீரகம் இவையெல்லாம் பாதிக்கப்படும். அத்தகைய மோசமான விளைவுகளை இவை ஏற்படுத்துபவை என எச்சரிக்கிறார்.
பஞ்சாப் மாநிலத்தின் மீன் வளத்துறை இயக்குனர் டாக்டர் மதன் மோகன், பஞ்சாப் மாநிலத்தினுள் கிடைக்கும் மீன்களில் இது போல் சேர்க்கப்படுவதில்லை. அவை ஐஸில் வைத்து உடனடியாக விற்கப்படுகின்றன. மற்றபடி கடல் மீன்களில் தான் இவை சேர்க்கப்படுகின்றன என தெரிவித்தார்.