வேம் என்றால் என்ன என்று பார்க்கலாமா?
வேம்( ஆர்பஸ்குளார் மைக்கோரைசா) என்பது பயிர்களுக்கு தேவையான மணிச்சத்து, கந்தகம், துத்தநாகம் மற்றும் சுண்ணாம்பு சத்தை மண்ணிலிருந்து கிரகித்து பயிர்களுக்கு கொடுக்கும் வேர் உட்பூசனமாகும்.
வேம் என்னால் என்ன, எந்தெந்த பயிர்களுக்கு பயன்படுத்த வேண்டும் என்று பார்க்கலாமா?
வேம் என்பது ஒரு உயிர் உரமாகும். காய்கறி பயிர்கள், பழவகைகள், மரக்கன்றுகள்,தென்னை, மலைத்தோட்டப்பயிர்கள் மற்றும் எல்லா வகை நாற்றங்கால் பயிர்களுக்கும் பயன்படுத்தலாம்.
வேம் பயன்படுத்துவதால் என்னென்ன நன்மைகள் என்று பார்க்கலாமா?
வேம்மை எப்படி பயன்படுத்தலாம் என்று பார்க்கலாமா?
ஒரு சதுர மீட்டர் நிலப்பரப்பிற்கு 100 கிலேர் வேம் உயிர் உரத்தை விதைப்பதற்கு முன் நாற்றங்காலில் கிழே 2-3 செ.மீ ஆழத்தில் இடவும். வளர்ந்தபயிருக்கு 50 முதல் 200 கிராம் வேமை வேர்பாகத்தில் இட்டு மண் அணைக்கவும். பாலித்தீன் பையில் உள்ள நாற்றுக்களுக்கு ஒரு பைக்கு 10 கிராம் உட்பூசனம் போடவும், 1000 கிலோ மண்கலவையில் 10 கிலோ வேம் கலந்து பாக்கெட்டில் இடலாம்.