இன்றும் உள்ளாட்சி தேர்தல் அடட்வணையை தாக்கல் செய்யாத தேர்தல் ஆணையம்!

Forums Inmathi News இன்றும் உள்ளாட்சி தேர்தல் அடட்வணையை தாக்கல் செய்யாத தேர்தல் ஆணையம்!

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #10115
    Inmathi Staff
    Moderator

    உள்ளாட்சி தேர்தல் குறித்த அட்டவணையை சென்னை உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் இன்று தாக்கல் செய்யவேண்டும் என நீதிமன்றம் உத்தவிட்டிருந்தது. அதனையடுத்து தேர்தல் ஆணையம் இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் தேதி அட்டவணையை தாக்கல் செய்யும். அதனால் விரைவில் உள்ளாட்சி தேர்தல் களம் சூடுபிடிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

    இந்நிலையில், இன்றைய தினம் மாநில தேர்தல் ஆணையம் இன்றும் அட்டவணையை தாக்கல் செய்யவில்லை. வார்டு மறுவரையறை பணிகள் இன்னும் முடிவடையாததால் தாக்கல் செய்யவில்லை என்றும் ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை காலஅவகாசம் வழங்கும்படியும் ஆணையம் கேட்டுக் கொண்டது. மேலும் வார்டு மறுவரையறை அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட பிறகு 3 மாதத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.

Viewing 1 post (of 1 total)
  • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This