சுருக்குமடி வலைக்கு எதிராக மீன் வளத்துறையினர் ஒலிபெருக்கியில் எச்சரிக்கை

Forums Communities Fishermen சுருக்குமடி வலைக்கு எதிராக மீன் வளத்துறையினர் ஒலிபெருக்கியில் எச்சரிக்கை

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #10079
    Inmathi Staff
    Moderator

    தமிழகத்தில் மீன்வளத்தை பாதுகாக்கும் நோக்கில் கடந்த 2010ம் ஆண்டு  சுருக்குமடி வலைகள் அரசால் தடை செய்யப்பட்டன. இருந்தபோதிலும் கடலூர் மாவட்டத்தில் பெரிய படகுகள் வைத்திருப்பவர்கள் சுருக்குமடி வலைகளை பயன்படுத்தினர். இதுதொடர்பாக மீனவர்களுக்கிடையே அடிக்கடி மோதல்கள் ஏற்பட்டு கடற்கரை கிராமங்களில் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டது. சமீபத்தில் இது தொடர்பாக நடைபெற்ற கலவரத்தில் சோனங்குப்பம் மீனவர் பஞ்சநாதன் படுகொலை செய்யப்பட்டார். இதனையடுத்து, சுருக்குமடி வலை பயன்படுத்துவது தொடர்பாக தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயம் மாவட்ட நிர்வாகத்திற்கு ஏற்பட்டது.

    மீனவர்கள் சங்க பிரதிநிதிகளை அழைத்து மாவட்ட நிர்வாகம், அமைச்சர் எம்.சி.சம்பத் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் சில கிராமத்தினர் சுருக்குமடி வலையை பயன்படுத்தமாட்டோம் என்று தெரிவித்தனர். எனினும், சில கிராமத்தினர் இதற்கு ஒத்துழைப்பு வழங்கவில்லை. இதனையடுத்து சென்னை உயர்நீதிமன்றத்திலும் மீனவர் கிராமத்தினர் சுருக்குமடி வலைகளுக்கு எதிராக மனுவாக தாக்கல் செய்தனர்.இந்நிலையில் கடலூர் மாவட்ட மீன்வளத்துறையினர்  கடலூர் துறைமுகம், சிங்காரத்தோப்பு, அக்கரைகோரி, சோனங்குப்பம், தேவனாம்பட்டினம் ஆகிய மீனவர் கிராமங்களில் ஆட்டோவில் ஒலிபெருக்கி மூலமாக அறிவிப்பு செய்தனர். அதில், அரசால் தடை செய்யப்பட்ட சுருக்குமடி வலையை பயன்படுத்தும் மீன்பிடி படகுகள் பறிமுதல் செய்யப்படும். ஆகஸ்ட் 1ம் தேதி முதல் இச்சட்டம் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படும் என்று தெரிவித்தனர்.கடலூர் மாவட்டத்தில் 171 மீன்பிடி படகுகளில் சுருக்குமடி வலை பயன்படுத்துவது தெரிய வந்துள்ளது.

Viewing 1 post (of 1 total)
  • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This