குமரி மாவட்டம் புத்தன்துறை குமார், கடியப்பட்டணம் ஆரோக்கியராஜ், கேசவன்புத்தன்துறை சகாய மைக்கேல், ராஜாக்கமங்கலம் துறை ஜோசப், சூசை, பிரான்சிஸ், ஜேசுதாசன், சேவியர், நெல்லை மாவட்டம் பெருமணல் செல்வ கஸ்பார், சந்தியாகு விஜய், ஜேசு இக்னேசியஸ், கூட்டப்பனை மார்க்வர்க், தூத்துக்குடி மாவட்டம் வீரபாண்டியபட்டணம் பெனிட்டோ, சேவியர், சுஜய் பர்னாண்டஸ் உள்பட 21 மீனவர்கள் ஒப்பந்த அடிப்படையில் ஈரானில் முகம்மது சலா என்பவரது படகுகளில் மீன்பிடித்தொழில் செய்து வந்தனர். இந்நிலையில் இவர்களுக்கு சேர வேண்டிய கூலியை முகம்மது சலா கடந்த பல மாதங்களாக கொடுக்காமல் அலைக்கழித்துள்ளார். அவர்களை மீட்டு தாய் நாட்டு அழைத்து வர நடவடிக்கை எடுக்க அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, அரசு எடுத்த முயற்சியின் பலனாக, இம்மீனவர்கள் இன்று அதிகாலை அவரவர் வீடுகளுக்கு வந்து சேர்ந்தனர்.