மீன் வளத்துறை ஆய்வாளர் பணி தேர்விற்கான அறிவிக்கை விரைவில் வெளியாக வாய்ப்பு

Forums Communities Fishermen மீன் வளத்துறை ஆய்வாளர் பணி தேர்விற்கான அறிவிக்கை விரைவில் வெளியாக வாய்ப்பு

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #10007
    Inmathi Staff
    Moderator

    மீன் வளத்துறை ஆய்வாளர் மற்றும் உதவி ஆய்வாளர் பணியிடங்களுக்கான தேர்வுக்கான அறிவிப்பை டி.என்.பி.எஸ்.சி அடுத்த வாரம் வெளியிட உள்ளது.

    மீன் வளத்துறையின் 72 ஆய்வாளர் மற்றும் 11 உதவி ஆய்வாளர் பணிகளுக்கு 2018 ஆம் ஆண்டில் தேர்வு நடத்தப்படும் என டி.என்.பி.எஸ்.சி அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஜூலை 15 ஆம் தேதியே தேர்வு நடத்தப்படும் என அட்டவணையில் இருக்கும் நிலையில், ஜூலை மாதம் கடந்த பின்னரும் அதற்கான விண்ணப்பங்கள் கூட பெறாத நிலை தொடர்ந்து வந்தது. இந்நிலையில், விரைவில் அதற்கான அறிவிப்பை வெளியிட உள்ளதாகவும், ஜூலை மாதத்தை விட தற்போது காலிப்பணியிடங்கள் அதிகரித்துள்ளதாகவும், அவற்றையும் சேர்த்தே நிரப்ப உள்ளதாக டி.என்.பி.எஸ்.சி அதிகாரிகள் கூறுகின்றனர்.

    இந்த பணிகளுக்கு மீன் வள பட்டப்படிப்பு மற்றும் விலங்கியல் பட்டப்படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Viewing 1 post (of 1 total)
  • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This