மாமல்லபுரம் கடற்கரை கோயிலில் சவுக்கு மரங்கள் நட தொல்லியல் துறை நடவடிக்கை

Forums Communities Fishermen மாமல்லபுரம் கடற்கரை கோயிலில் சவுக்கு மரங்கள் நட தொல்லியல் துறை நடவடிக்கை

Viewing 1 post (of 1 total)
 • Author
  Posts
 • #10002
  Inmathi Staff
  Moderator

  காஞ்சீபுரம் மாவட்டம், மாமல்லபுரத்தில் உள்ள கடற்கரை கோவில், மாமல்லபுரத்தை ஆண்ட 2-ம் நரசிம்ம வர்ம பல்லவ மன்னனால் கருங்கல் பாறைகளால் கட்டப்பட்டது. எந்தவித தொழில்நுட்ப வசதியும் இல்லாத 7-ம் நூற்றாண்டில் இந்த கோவில் கோபுரத்தில் எல்லா இயற்கை பேரிடரையும் தாங்கும் வகையில் கலசம் வைத்து கோவிலை கட்டினர்.

  இந்நிலையில் இக்கோயிலை பாதுகாப்பது குறித்து தொல்லியல் அதிகாரிகள் தரப்பில் கூறியிருப்பதாவது : இந்த கோவிலை கடல் அரிப்பில் இருந்தும், உப்புக்காற்று அரிக்காமல் இருப்பதற்கும் மத்திய தொல்லியல் துறை பல்வேறு தடுப்பு முறைகளை செய்து பாதுகாத்து வருகிறது. குறிப்பாக கடற்கரை கோவில் பின்புறம் கடல் நீர் உட்புகுந்து அரிக்காமல் இருப்பதற்கு அரண் போல் இந்த கோவிலை சுற்றி ஏராளமாக கற்களை கொட்டி பாதுகாத்து வருகிறது. கற்கள் கொட்டப்பட்டதால் கடல் அலை இந்த கோவிலுக்குள் புகாமல் தடுக்கப்பட்டுள்ளது. தடுப்புச்சுவரும் வேலியும் ஒரு புறம் அமைக்கப்பட்டது.

  உப்பு காற்றில் இருந்து பாதுகாக்க தற்போது ஆண்டு தோறும் ரசாயன கலவை பூசியும் பாதுகாக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக தொல்லியல் துறை சர்வதேச அளவில் கட்டிடக்கலை நிபுணர்கள் மற்றும் பொறியாளர்களின் ஆலோசனைகளை கேட்டறிந்து கடல் காற்று, உப்பு படிமங்களில் இருந்து பாதுகாக்கிறது.

  உப்பு காற்று அரித்ததால் இந்த கோவிலை சுற்றி அழகாக காட்சி அளித்த நந்தி சிற்பங்கள் தற்போது உருவ அமைப்புகள் மாறி எலும்பு கூடு போல காட்சி அளிக்கிறது. கோவில் சுவர்களில் இருந்த தசாவதார காட்சிகளுடன் கூடிய சிற்பங்களும் உப்பு காற்றினால் அரிக்கப்பட்டு அது இருந்த இடம் தெரியாமல் போய்விட்டது.

  இதனையடுத்து தொல்லியல் துறை உலக பாரம்பரியம் மிக்க இந்த கலை பொக்கிஷத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து 6 மாதங்களுக்கு ஒரு முறை ரசாயன கலவை பூசி உப்பு படிமங்களை அகற்றி வருகிறது. கோவிலை சுற்றிலும் தற்போது அதிக அளவில் சவுக்கு மரங்களை நட்டு அரண் போல் பாதுகாத்து வருகிறது. கோவிலின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இரண்டு கோபுரங்களின் கருவறைகுள் சுற்றுலா பயணிகளும் தற்போது அனுமதிக்கப்படுவதில்லை. மனிதர்கள் சுவாசிக்கும் காற்று மாசினாலும் இந்த கோவில் மாசடைய வாய்ப்பு உள்ளதாக இருப்பதால் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது எனக் கூறுகின்றனர்.

  மேலும் இந்த கோவில் வளாகத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதற்கும், சிகரெட் பிடிப்பதற்கும் தொல்லியல் துறை தடைவிதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

  • This topic was modified 2 years, 10 months ago by Inmathi Staff.
Viewing 1 post (of 1 total)
 • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This