கப்பற்படை மாலுமி பணிக்கு மீன் வளத்துறை சார்பில் பயிற்சி

Forums Communities Fishermen கப்பற்படை மாலுமி பணிக்கு மீன் வளத்துறை சார்பில் பயிற்சி

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #10000
    Inmathi Staff
    Moderator

    இந்திய கடலோர காவல்படை மற்றும் இந்திய கப்பல் படையில் நவிக் (பொது) மற்றும் மாலுமி பணிகளுக்கான தேர்வுகளில் மீனவர்களின் வாரிசுகள் தேர்வு செய்யப்பட ஏதுவாக தமிழக மீன்வளத்துறை மற்றும் கடலோர காவல் குழுமம் வழங்கும் சிறப்பு பயிற்சிக்கு விண்ணப்பங்கள் அளிக்க மீன் வளத்துறை அறிவுறுத்தியுள்ளது.

    பிற்படுத்தப்பட்டோருக்கு குறைந்த பட்ச வயது 18 முதல் அதிகபட்சம் 22 வயது வரை இருக்கலாம். மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு அதிக பட்சம் 25 வயதும், எஸ்சி,எஸ்டியினருக்கு 27 வயது வரையும் இருக்க வேண்டும். 10 மற்றும் 12 ஆம் வகுப்பில்  50 % மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருப்பதுடன் கணிதம் மற்றும் இயற்பியலில் கூட்டுத் தொகை 50% இருக்க வேண்டும். உயரம் குறைந்த பட்சம் 157 செ.மீட்டராக இருக்க வேண்டும்.

    இத்தகைய தகுதியுள்ளவர்கள், அதற்காக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஆகஸ்ட் 7 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கும் படி மீன் வளத்துறை செய்திக் குறிப்பு கூறுகிறது.

Viewing 1 post (of 1 total)
  • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This