Forums › Communities › Farmers › புகைப்படம் மூலம் பயிர் நாசத்தை அளவிட்டு காப்பீடு வாங்க முடியும்-அமெரிக்க பொருளாதர நிபுணர் › Reply To: புகைப்படம் மூலம் பயிர் நாசத்தை அளவிட்டு காப்பீடு வாங்க முடியும்-அமெரிக்க பொருளாதர நிபுணர்
- பயிர் காப்பீட்டு திட்டத்தைப் பற்றி என்னை போன்ற ஏராளமான விவசாயிகளுக்கு எதிர்மறையான கருத்துதான் நிலவுகிறது.
For example.
சென்ற புயல் வெள்ள சேதத்தின் போது நாகை மாவட்டம் திருக்குவளை வட்டத்திற்கு (முதலமைச்சர் கலைஞரின் பிறந்த ஊர்) 99 %, அருகாமையில் உள்ள சிக்கல் வட்டத்திற்கு 63 % , 60 கிலோமீட்டர் தொலைவில் உள்ள எங்கள் கிராமத்திற்கு 0.1% கொடுக்கப்பட்டது.
இதுபோன்ற நேர்மையான அதிகாரிகளை கொண்டு எவ்வாறு இழப்பீடு வழங்குவது?
நநாகை மாவட்டம் high risk zone ல் வருகிறது.ஆகையால் 1 ஏக்கருக்கான premium 32% சுமார் 1 ஏக்கருக்கு 8250 ரூ. இதில் விவசாயின் பங்கு 250 மட்டுமே. மீதி தொகையை மத்திய மாநில அரசுகள் காப்பீட்டு நிறுவனங்களுக்கு வழங்குகிறது. அவ்வாறு வழங்காமல் விவசாயிகளிடம் நேரடியாக அந்த பணத்தை வங்கி கணக்கில் செலுத்தி விருப்பமுள்ள விவசாயிகளை காப்பீடு எடுத்து கொள்ளும்படி அறிவுறுத்தினால், காப்பீடு நிறுவனங்களின் மோசடி தவிர்க்கப்படும்.