Forums › Inmathi › News › சிவகங்கை ஜாதி பிரச்சினை : மேலும் ஒருவர் மரணம் › Reply To: சிவகங்கை ஜாதி பிரச்சினை : மேலும் ஒருவர் மரணம்
சிவகங்கை மாவட்டம் திருப்பாசேத்தி, கச்சநத்தம் கிராமத்தில் கடந்த திங்கட்கிழமை அதிகாலை நடத்தப்பட்ட வன்முறையில் இரண்டு பள்ளர் சமூகத்தை சேர்ந்தவர்கள் படுகொலை செய்யப்பட்டனர். ஆறு பேர் தீவிர படுகாயங்களுடன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். சிகிச்சை பலனின்றி சந்திரசேகர் என்னும் 36 வயது நபர் இன்று உயிரிழந்தார். சாதி வன்முறையாக மட்டுமல்லாமல் கஞ்சா விற்பனை , கந்துவட்டி போன்றவற்றை நடைமுறைப்படுத்தி வந்த சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த சாதி இந்துக்களின் வன்கொடுமையை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. குற்றவாளிகளின் மீது நடவடிக்கை எடுக்கப்படும்வரை உடல்களை வாங்கப்போவதி ல்லை என கச்சநத்தம் மக்கள் முடிவு செய்துள்ளனர்