Forums › Communities › Fishermen › ஸ்டெர்லைட் ஆலைக்கு சீல் வைப்பு › Reply To: ஸ்டெர்லைட் ஆலைக்கு சீல் வைப்பு
Ranga Rasu Ra2 hrs
ஸ்டெர்லைட்டை மூட அரசாணை பிறப்பித்திருக்கிறார்கள்.
இதில் ஆலையை மூடுவதற்கான காரணங்களாக சுற்றுச் சூழலை காப்பதற்காகவும், காடுகள் காப்பாற்றப் பட வேண்டியதற்காகவும், காட்டு விலங்குகளின் நலனுக்குக்காகவும் இந்த ஆலையை மூட உத்தரவிடுவதாக குறிப்பிட்டிருக்கிறார்கள்.
இந்த ஸ்டெர்லைட் ஆலையால் பொதுமக்களுக்கு ஏற்பட்ட உடல் நலக் குறைவுகள், அதிகமாகிப் போன கேன்சர் நோயாளிகள், இறந்து போன நோயாளிகள், கேன்சர் அல்லாது வேறு நோய்கள் வந்து உடனேயே இறந்து போன பொதுமக்கள்..
கூடவே ஆலையில் வெளியேறும் நச்சுப் புகையில் இருக்கும் நச்சு வாயுக்களின் அதிப்படியான அளவு,, நிலத்தடி நீருக்கு ஏற்பட்டிருக்கும் பாதிப்பு.. அந்த நீரைக் குடிக்கும் பொதுமக்களுக்கு ஏற்படும் பாதிப்பு.. இதையெல்லாம் அரசாணையில் சேர்த்துக் குறிப்பிட்டிருந்தால் அனைத்து ஆதாரங்களையும் முன் வைத்து வாதாடலாம். நிச்சயமாக ஜெயிக்கலாம்.
காடும், காட்டு விலங்குகளும் என்று பேசினால் என்ன ஆதாரத்தை இவர்கள் கொடுக்கப் போகிறார்கள்..? தூத்துக்குடில ஏதுய்யா காடு..?
இந்த அரசாணையை வைத்துத்தானே நீதிமன்றத்தில் விசாரணையே நடைபெறப் போகிறது..?
“நான் அடிக்கிற மாதிரி அடிக்கிறேன். நீ அழுகுற மாதிரி அழு…” என்று அனில் அகர்வாலும், நமது மங்குனி அமைச்சரவையும் சேர்ந்து போடும் ஆட்டம்தான் இது..!
நிச்சயமாக இந்த ஆணையை உச்சநீதிமன்றத்தில் அனில் அகர்வால் உடைத்தே தீருவார்.
#BanSterlite #Sterlite #Tuticorinட
இத்தகவல்கள் அனைத்தும் ஏறத்தாழ சரியே என்கின்றனர் ஆர்வலர்கள்