Forums › Communities › Fishermen › தூத்துக்குடி மக்களின் கோரிக்கை என்ன ? › Reply To: தூத்துக்குடி மக்களின் கோரிக்கை என்ன ?
மே 28, 2018 at 4:35 மணி
#3023
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பில் தமிழக அரசு மொத்தம் 86 முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்திருப்பதாகவும் அனைத்தும் ஸ்டெர்லைட்டுக்கெதிரான ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது என்றும் புது டில்லி செய்தியாளர் அர்விந்த் குணசேகர் தெரிவிக்கிறார்.
சிறப்பு துணை வட்டாட்சியர் பி சேகரின் புகாரின் பேரிலேயே வழக்குக்கள் பதிவாகியிருக்கின்றன, நிலை கட்டுக்கு மீறி போனதால் துப்பாக்கி சூட்டுக்கு தான் உத்திரவிட்டதாகவும் அவர் கூறியிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.