Forums › Communities › Fishermen › இயல்பு வாழ்க்கைக்கு திரும்பும் தூத்துக்குடி › Reply To: இயல்பு வாழ்க்கைக்கு திரும்பும் தூத்துக்குடி
முகநூலிலிருந்து
Thiyaga Rajan
1 hr ·
தூத்துக்குடி நீதித்துறைக்கு நன்றி!
தூத்துக்குடி மாவட்ட நீதிபதி
சாரு ஹாசினியின் பணி போற்றத்தக்கது. இரவு இரண்டு மணிவரை பணியாற்றியுள்ளார்..
தட்டச்சர் இல்லாத போதும் இவரே டைப் செய்து உத்தரவிட்டுள்ளார்.
நல்லவேளையாக இதற்கு முன் இருந்த ஒருவர் இருந்திருந்தால் நீதித்துறை
பெருஞ்சாபத்தை அடைந்திருக்கும்.
அதே போல் நீதிபதி அண்ணாமலை அவர்களின் பங்களிப்பு நினைவுகூரத்தக்கது.. தன் உயிருக்கு ஆபத்து என்பதை கூட பொருட்படுத்தாமல் ஒவ்வொரு காவல்நிலையமாக ஏறி இறங்கி பல அப்பாவிகளை விடுவித்துள்ளார்.
பாதிக்கப்பட்ட மக்களிடம்
வாக்குமூலங்களையும் புகார்களையும்
பதிவு செய்துள்ளார்.. இவை பின்னர் மிகப்பெரிய ஆதாரங்களாக மாறும்.
இலவச சட்ட உதவி மையத்தின் செயலரின் பணிகளும் மகத்தானது.
இந்த நீதிபதிகள் தங்களின் பொறுப்பை உணர்ந்து, மிக மனிதநேயத்துடனும் சட்டப்பூர்வமாகவும் செயல்பட்டுள்ளது பாராட்டுக்கும் நன்றிக்கும் உரியது.
ஒரு அரைபுள்ளி தவறாக விழுந்தமைக்காக மனுவை தள்ளுபடி செய்யும் ஈகோ கொண்டவர்கள் மத்தியில் இவர்களை போன்றவர்களினால் நீதித்துறையின் மாண்பு சிறக்கிறது.
வழக்கறிஞர்களுக்கிடையே கடந்த இரண்டு மூன்று வருடங்களாக பல பிணக்குகள் இருந்துவந்தபோதும்,
எல்லாம் மறந்து மக்களுக்காக ஒன்றுபட்டு நின்று, காயம்பட்டவர்களுக்கு உணவளித்தும்,
சட்டப்பூர்வமான நடவடிக்கைகளுக்கு பெரும் பலமாய் நின்ற தூத்துக்குடி வழக்கறிஞர்களுக்கு நன்றிகள் பல.
உங்கள் பணி இப்போதுதான் தொடங்கியுள்ளது.
நெல்லை..குமரி .. மதுரை.. சென்னை
வழக்கறிஞர்களுக்கும் நன்றி.
தலைவர்கள் நம்மை தவிக்கவிட்டாலும்
தமிழின உணர்வே நம்மை இணைக்கும்.
-வழக்கறிஞர் பா.அசோக்
கூடுதல் தகவல் :
மாஜிஸ்ட்ரேட் திருமிகு. சாமுவேல் அவர்களின் நேர்மையான அர்ப்பணிப்பு மறவாமல் பதிவு செய்யப்பட வேண்டியது. இரண்டாம் நாள் அவரது பணியை நீதிமன்றத்தில் சுமார் ஒரு மணி நேரம் அருகிருந்து பார்த்தவர்கள் நெகிழ்ச்சி கலந்த நன்றிப்பெருக்கினை வெளியிட்டார்கள்.
மேலே சொல்லப்பட்ட அனைவரும் தங்களின் மாண்புமிக்க அறமன்றப்பணியை நெறி பிறழாமல் செம்மையுறச் செய்தது, வள்ளுவம் வீழ்ந்து விடவில்லை. வள்ளுவத்தின் வேர்களும், சுரப்பிகளும் தமிழ் மண்ணிலிருந்தே வெளிப்படும் என்பதை இந்த மாமனிதர்கள் வரலாற்றில் பதிவு செய்துள்ளனர்.
அனைவர்க்கும் நன்றி. நன்றி.
– பா. அசோக், வழக்குரைஞர்.