Forums › Communities › Fishermen › இயல்பு வாழ்க்கைக்கு திரும்பும் தூத்துக்குடி › Reply To: இயல்பு வாழ்க்கைக்கு திரும்பும் தூத்துக்குடி
அமைச்சரிடம் பேசிய சந்தோஷ் ராஜ் முற்றுகை போராட்டத்தின் போது நான் தண்ணீர், பிஸ்கட் பாக்கெட்டுக்களை வழங்கினேன். மாவட்ட வளாகத்தில் நிகழ்ந்த தடியடியில் போலீஸார் என்னையும் தாக்கினர். காரணம் கேட்டதற்கு
நீ கறுப்புச்சட்டை அணித்திருக்கிறாய் அதனால் அடிப்போம்' எனக் கூறினர். இதனால் எனது தலை, முதுகு மற்றும் கால்பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக வேண்டும். தண்ணீர் கட், மின்சாரம் கட் மாதிரியான தாற்காலிக நடவடிக்கைகள் வேண்டாம். நிரந்தரமாக மூடப்படும் என எழுதி கையெழுத்து போட்டுக்கொடுங்கள்" என்று பேசினார். இளைஞரின் பேச்சில் அதிர்ந்த அமைச்சர் கடம்பூர் ராஜு, கையெழுத்து கேட்டதற்கு,
முடியாது தம்பி. அரசு நடவடிக்கை எடுக்கும்’ என்று கூறி அடுத்தவரை பார்க்கச் சென்றார். … கிட்டத்தட்டப் பாதிக்கப்பட்டவர்கள் 50 பேரை நலம் விசாரிக்காமல் வெளியேறிவிட்டார்