Forums › Communities › Fishermen › Tuticorin Police Statement › Reply To: Tuticorin Police Statement
மே 24, 2018 at 6:53 காலை
#2692
வன்முறையினைக் கட்டுப்படுத்த துப்பாக்கி சூடு என்பது இறுதிக்கட்ட நடவடிக்கையே. அதற்கு முன் சட்டவிரோதமான கூட்டம் என்று அறிவிக்கவேண்டும், அதன் பின் மாவட்ட ஆட்சித் தலைவர் கூட்டத்தை கலைக்க உத்திரவிடவேண்டும், தடியடி, கண்ணீர்ப்புகை, நீர் பாய்ச்சுதல், இவற்றின் பிறகு துப்பாக்கி சூடு துவங்க இருக்கிறது என்பதை ஒலிபெருக்கிவழியே எச்சரிக்கை அறிவிக்கப்படவேண்டும், கலவரக்கொடி ஏற்றப்படவேண்டும், வானத்தில் சுடவேண்டும், பின்னர் இடுப்பிற்குக் கீழ்தான் குறிவைக்கவேண்டும், இப்படி விதிமுறைகள் ஏராளம். இவற்றில் ஒன்றைக்கூட தூத்துக்குடி போலீசார் பின்பற்றவில்லை என்கின்றனர் ஆர்வலர்கள்.