Reply To: மீனவர் நலவாரியம் மூலம் பென்சன்*

Forums Communities Fishermen மீனவர் நலவாரியம் மூலம் பென்சன்* Reply To: மீனவர் நலவாரியம் மூலம் பென்சன்*

#2514
Kurumpanai Berlin
Participant

மீனவர் நலவாரிய திட்டத்தில் ஓய்வுபெறும் மீனவர்களுக்கு பென்சன் வழங்கப்படும் என்று தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்காகத்தான் சந்தாவும் பங்குப்பணமும் வழங்குகிறார்கள் மீனவர்கள். எல்லா நலவாரியங்களிலும் அந்தந்த நலவாரியங்களே ஓய்வூதியம் வழங்குகிறது. ஆனால் மீனவர் நலவாரியத்தில் மட்டும் வருவாய்த் துறையை அணுகச் சொல்வது என்ன நியாயம்? நாகர்கோவில் மீன்வளத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்திலிருந்து பென்சன் பெற காத்திருப்போரின் பட்டியல் அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. வருவாய்த்துறையில் கொடுப்பது 18  வயதுக்குமேல் ஆண் பிள்ளைகள் இல்லாத , சொந்தமாக வீடில்லாத, கணவனை இழந்த, கணவனால் கைவிடப்பட்டவர்களுக்குத்தான் உதவித் தொகை வழங்கப் படுகிறது. நலவாரியம் மூலம் வழங்கப்படுவது நலவாரிய உறுப்பினராக செயல்பட்டு 60 வயதைக்கடந்த அனைவருக்கும் கொடுக்க வேண்டியது. மீனவர்களின் உரிமையைப்பறித்து வருவாய்த்துறையில் பிச்சை கேட்கச் செய்வது எந்த வகையில் நியாயம்?!

குறும்பனைபெர்லின்.

Pin It on Pinterest

Share This