Reply To: மீனவர் நலவாரியம் மூலம் பென்சன்*

Forums Communities Fishermen மீனவர் நலவாரியம் மூலம் பென்சன்* Reply To: மீனவர் நலவாரியம் மூலம் பென்சன்*

#2513
Kurumpanai Berlin
Participant

மீனவர் நலவாரியம் என்று ஒன்று செயல்படவே இல்லை. கடந்த தி.மு.க ஆட்சி காலத்தில் மீன்வளத்துறை அமைச்சரின் தலைமையில் வாரியம் செயல்பட்டது. அந்த வாரியத்தின் உறுப்பினராக குமரி மாவட்டத்திலிருந்து திரு.பசலியான் அவர்கள் இருந்தார்கள். அ.தி.மு.க ஆட்சி வந்து இந்த ஏழு ஆண்டுகளில் இதுவரை மீனவர் நலவாரியம் அமைக்கப்படவுமில்லை. இதுவரை ஒரு கூட்டம்கூட நடத்தப்படவில்லை. அப்படியிருக்க மீனவர்களின் கோரிக்கையை எந்த வாரியத்தில் போய் சொல்லமுடியும்?

பென்சன் வழங்குவது வருவாய்த் துறை மூலம்தான் என்று சொல்வதை ஏற்றுக் கொள்ள முடியாது. ஏனென்றால் உழவர் நலவாரியம், கட்டுமான தொழிலாளர் நலவாரியம், தையல் கலைஞர்கள் நலவாரியம் போன்ற எல்லா நலவாரியங்களிலும் அதன் உறுப்பினர்களுக்கு பென்சன் வழங்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. அவர்களை வருவாய்த் துறையில் போய் கேளுங்கள் என்று சொல்லவில்லை. வருவாய்த் துறைமூலம் கொடுப்பது ஆதரவற்றோர், முதியோர் மற்றும் விதவைகளுக்கு வழங்கப்படும் சமூக நல உதவிகள். மீனவர்கள் கேட்பது தாங்கள் ஆண்டுதோறும் சந்தா செலுத்தி தாங்கள் உழைக்கும் காலங்களில் மீனவர் கூட்டுறவு சங்கம் மூலம் தனது பங்கைச் செலுத்தி தன்னால் உழைக்க முடியாமல் ஓய்வுபெறும் போது ஓய்வூதியம் பெறுவது. தன்னிடமிருந்து பணம் பிடிக்கும் நலவாரியம் அந்தப் பணத்தைத் தரவேண்டியது உரிமைப்பட்ட விசயம். அதைத் தரமறுப்பது ஏன்?

குறும்பனைபெர்லின்.

Pin It on Pinterest

Share This