Forums › Communities › Fishermen › மீனவர் நலவாரியம் மூலம் பென்சன்* › Reply To: மீனவர் நலவாரியம் மூலம் பென்சன்*
மீனவ நலவாரியத்தில் உள்ள உறுப்பினர்களுக்கு பென்சன் கிடைக்கவில்லை என்ற விவரம் தொடர்பாக அந்த துறையின் அமைச்சர் டி. ஜெயக்குமாரிடம் கேட்போது அவர் கூறியதாவது:-
மீவர்களை காக்கும் அரசாக இந்த அரசு விளங்குகிறது. பென்சன் என்பது வருவாய்துறை கீழ் வருகிறது. அந்த துறையின் மூலமாகதான் முதியோர் உதவி தொகை உள்பட அதை உதவித் தொகைகளும் வழங்கப்பட்டு வருகின்றன.
எந்த வாரியமாக இருந்தாலும், அதில் உள்ள உறுப்பினர்களுக்கு பென்சன் என்பது வருவாய்துறை மூலமாகதான் வழங்கப்படுகிறது. ஆனாலும் மீனவ நல வாரியத்தில் உள்ள உறுப்பினர்களுக்கு பென்ஷன் கிடைக்கவில்லை என்று சொல்கிறீர்கள். அப்படி இருக்க வாய்ப்பில்லை. தகுதி வாய்ந்த யாராக இருந்தாலும் அவர்களுக்கு உடனடியாக பென்சன் வழங்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
எனவே, தகுதியான நபர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு பென்சன் கிடைக்கவில்லை என்றால் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தக்க ஆவனத்தை சமர்ப்பித்தால் அவர்களுக்கு உடனடியாக பென்சன் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
மற்றப்படி வாரியத்தில் உள்ள உறுப்பினர்களின் குடும்பங்களுக்கு வாரியத்தின் அனைத்து பலன்களும் தொடர்ந்து கிடைத்து வருகிறது. மீனவர்களின் அரணாக இந்த அரசு விளங்குகிறது.
அதுமட்டுமல்ல பென்சன் கிடைக்காத வாரிய உறுப்பினர்கள் வாரியத்தில் மனு கொடுக்கலாம். அது வாரியத்தின் மூலமாக வருவாய்துறை அனுப்பப்பட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
மீனவர்கள் சங்கங்கள் வைத்துள்ளார்கள். அந்த சங்கங்கள் மூலமாகவும் அவர்களது பிரச்சினையை வாரியத்துக்கு கொண்டு வரலாம்.
இவ்வாறு அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.
சங்கர் – சென்னை.