Forums › Inmathi › News › மாற்றம் ஒன்றே மாறாததா?: பரியேறும் பெருமாள் காட்டும் நிகழ்கால நிஜங்கள்! › Reply To: மாற்றம் ஒன்றே மாறாததா?: பரியேறும் பெருமாள் காட்டும் நிகழ்கால நிஜங்கள்!

இதே கருங்குளம் எனக்கும் சம்பந்தபட்ட ஊர். ஊருக்கு சென்று வந்தது போலிருந்தது. கோனார், தேவர்கள் பழைய அக்ரஹாரம் வந்து விட்டார்கள் ஆனால் பள்ளர் இன மக்கள் கோவில் இருக்கும் (கோனார், தேவர்கள் இப்போது வசிக்கும்) வந்து விட்டார்களா என்ற கேள்வி…இன்னும் இன்னொரு வகையில் அதே ஜாதி அல்லது தீண்டாமை இன்னும் உள்ளது என சொல்வது போல் உள்ளது.
ஜாதி பாகுபாடு, வன்முறை இன்னும் உள்ளது என்பதையே கீழ்வெண்மணி , தர்மபுரி போன்ற கௌரவக்கொலை, பாப்பா பட்டி, கீரைப்பட்டி போன்ற இடங்களில் பஞ்சாயத்து தேர்தல் நடத்த முடியாமல் நடந்தபின்னும் கேலிக் கூத்து தான் நடந்தது. மாற்றம் உள்ளது என சொல்ல முடியுமே தவிர இனப் பாகுப்பாடு இந்தியாவில் இல்லை என சொல்லமுடியாது. .இன்னும் அரியானவில் கற்பழிக்க பட்டு கொலை செய்யப்படுபவர்கள் யார்? பசுவதை தடை சட்டம் கொண்டு வந்த பின் கொலை செய்யபட்டவர்கள் யார்?