பிரதமரின் கதிசக்தித் திட்டம்: ரயில்வே துறையில் மாற்றங்கள் கொண்டுவர செய்ய வேண்டிய 7 விஷயங்கள்!
’பிரதமர் கதி சக்தி தேசிய பெருந்திட்டம்’ (மாஸ்டர் பிளான்) என்பது பொருளாதார வளர்ச்சியிலும் தொடர் அபிவிருத்தியிலும் மாறுதலை ஏற்படுத்தும் ஓர் அணுகுமுறை. சாலை, ரயில்பாதை, விமானநிலையம், துறைமுகம், பொதுப்போக்குவரத்து, நீர்வழிப் போக்குவரத்து, மற்றும் போக்குவரத்து உட்கட்டமைப்பு ஆகிய ஏழு உந்துசக்திகளால் இந்த அணுகுமுறை எழுச்சிபெறும்