சமயம்

பெண்களுக்கும் ஐயப்ப தரிசனம்: குருசாமிகள் அழைத்துச் செல்வார்களா?

ஆரம்பம் முதலே வரவேற்பும் எதிர்ப்பும் இருந்த நிலையில், சபரிமலைக்கு ஐயப்பனை வழிபட பெண்களை அனுமதிக்க வேண்டும் என்று கேட்டு தொடரப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று இறுதி தீர்ப்பைக் கூறியுள்ளது. வழிபாட்டில், ஆண்- பெண் பாலின வேறுபாடு பார்க்கக் கூடாது என்று கூறும் உச்ச...

குற்றங்கள்

இறந்தாலும் விடாத விசாரணை : தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் இறந்தவருக்கு விசாரணை கமிஷன் சம்மன்

தூத்துக்குடியில் கடந்த மேய் 22 ஆம் தேதி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின் போது,போராட்டக்காரர்கள் மீது போலீஸார் துப்பாக்கி சூடு  நடத்தினர். இதில் 13 பேர் பலியாகினர். இந்த சம்பவத்தில் தூத்துக்குடி திரேஸ்புரத்தை சேர்ந்த  மீனவர் கோயில் பிச்சை மகன் கிளாஸ்டனும்...

பண்பாடு

கன்னியாகுமரி மக்கள், தமிழகத்தில் தனித்து தெரியப்படுவது ஏன் ?

தமிழகத்தில் திராவிட இயக்கத்தின் ஆணி வேர் செல்லாத இடங்களே இல்லை எனலாம். ஆனால், கன்னியாகுமரி மாவட்டம் மட்டும் கொஞ்சம் விதிவிலக்கு. தேசிய கட்சிகளான பாஜக, காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் போன்றவற்றையும், அவற்றின் கொள்கைகளையும் ஏற்று தனக்கேயுரிய பாதையில்...

மீனவர்கள்

கொச்சி கடலில், சரக்குக் கப்பல்களுக்கு அஞ்சி தொழில் செய்யும் குமரி மீனவர்கள்

“கப்பல் எங்கள் படகில் மோதியதால் நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் உயிர் பிழைத்தவனில் நானும் ஒருவன்” எனக் கூறுகிறார், மணக்குடியை சேர்ந்த மீனவர் எப்.பலவேந்திரன். கேரளா மாநிலத்தின் கொச்சியை அடுத்த முனம்பத்தில் நேற்று முன்தினம் தேச சக்தி என்ற மத்திய அரசுக்கு சொந்தமான எண்ணெய்...

மீனவர்கள்

கேரளா மாநிலம் கொச்சியை அடுத்த முனம்பத்தில் மீன் பிடி படகு ஒன்று சரக்குக் கப்பலுடன் மோதியதில் குமரி மாவட்டத்தை சேர்ந்த மீனவர்கள் 3 பேர் மரணமடைந்துள்ளனர்.

கேரளா மாநிலம் கொச்சியை அடுத்த முனம்பத்தில் மீன் பிடி படகு ஒன்று சரக்குக் கப்பலுடன் மோதியதில்  குமரி மாவட்டத்தை சேர்ந்த மீனவர்கள் 3  பேர் மரணமடைந்துள்ளனர். கொச்சியை அடுத்த முனம்பம் பகுதியிலிருந்து கேரளாவை சேர்ந்த ஒருவருக்கு சொந்தமான  ஒஷியானி என்ற பெயர் கொண்ட மீன்...

மீனவர்கள்

இலங்கை அரசு விடுவித்தாலும் படகுகளை மீட்க புதிய சிக்கல் : இழப்பீடு கோரும் தமிழக மீனவர்கள்

ராமேஸ்வரத்தின் நம்பு ராஜ்குமார் புதிய படகு வாங்கி இரண்டு மாதங்களே ஆகியிருக்கும்.  ஆனால், படகு வாங்கிய கடனை அடைக்க துவங்குதற்குள் இலங்கை கடற்படையால் அவரது படகு பிடிக்கப்பட்டது. “ ஜூலை 2016 இல் எங்கள் படகு பிடிபட்டது. என்னிடமிருந்த ஒரே வருமானம் ஈட்டக் கூடிய தொழில்...

மீனவர்கள்

சாளை மீன் வரத்தில் குறைவு : தமிழகக் கடல் பகுதியில் ஏற்படும் சூழியல் மாற்றங்கள்

  "நாட்டுப் படகில் சிறிய அளவில் மீன் பிடிப்பவர்கள்  நாங்கள். ஒரு காலத்தில் சாளை மீன்கள் தான் எங்களுக்கு அதிகம் கிடைத்து வந்தன. ஆனால் இப்போதெல்லாம் மிகக்குறைவாகவே கிடைக்கின்றன. மூன்று வாரத்திற்கு முன்னர் எனது மாமாவின் வலையில் கொஞ்சம் கிடைத்தது. ரூ.5000 த்திற்கு...

மீனவர்கள்

கடற்பாசி சாகுபடியில் தாக்கத்தை ஏற்படுத்தும் சுற்றுச்சூழல் பிரச்சினைகள்

பாம்பனை அடுத்த சின்னப்பாலம் சிறு மீனவர் கிராமம். இங்குள்ள ஆண்கள் பெரும்பாலும் நாட்டுப்படகுகளில் மீன் பிடிக்க சென்றுவிடும்  நிலையில், பெண்கள் கடற்பாசி சேகரிப்பதற்காக அருகாமையில் உள்ள குருசடித் தீவு, பள்ளித் தீவு, ஆவுஸித் தீவு உள்ளிட்ட தீவுப் பகுதிகளுக்கு...

சுற்றுச்சூழல்

அழிக்கப்படும் மீன் குஞ்சுகள் :  அபராதம் விதித்த கேரளா அரசு, தமிழக அரசு நடவடிக்கை எடுக்குமா? 

பொதுவாக, கடலில் வாழும் இளம்பருவ மீன் குஞ்சுகள் எதிர்கால மீன்வளத்தை உறுதிப்படுத்துபவை.  நச்சுக்களோ அல்லது மரபியல் ரீதியாக மாற்றமோ இல்லாமல் இயற்கையாக கிடைக்கும் ஒரு சில உணவுப் பொருட்களில் கடல் மீன்களும் ஒன்று. ஆனால், அத்தகைய எதிர்கால மீன்வளத்திற்கு சவால் விடும்...

மீனவர்கள்

கன்னியாகுமரியில் கடல் ஆம்புலன்ஸ்: ஒக்கிபுயல் போன்ற துயரங்களை தவிர்க்க மீனவர்களின் முயற்சி

கன்னியாகுமரி வரலாற்றில் ஒக்கிபுயல் எப்போதும் அச்சுறுத்தலை உண்டாக்கக்கூடியதுதான். தமிழக மீனவர்கள் எண்ணிக்கையில் நான்கில் ஒருபங்கினர் கன்னியாகுமரியில் வாழ்கின்றனர். இவர்கள் இயற்கையின் கருணையால் தான் தங்கள் அன்றாடத்தை கழிக்கின்றனர். ஒக்கிபுயலின் போது கடலுக்கு சென்று...

மீனவர்கள்

ராமேஸ்வரம் மீனவரகள் மீது கடுமையான இலங்கை சட்டத்தின் கீழ் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யபட்டது; இந்திய தூதரகத்தின் கோரிக்கை நிராகரிப்பு

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 12 பேரின் வழக்கு இன்று ஊர்க்காவல்துறை நீதிபதி முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ஜீட்சன் விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்துள்ளார். அதே நேரம், இதுவரை 16 மீனவர்கள் ஒரே வாரத்தில்  இலங்கை...

மீனவர்கள்

ஃபார்மாலின் கலப்பு: மீனவர்கள் கருத்து சொல்கிறார்கள்

கடந்த சில நாள்களாகவே மீன் உணவுப் பிரியர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் பார்மலின் கலக்கப்பட்ட மீன்கள் என்ற செய்திகள்பரவலாக வந்த வண்ணம் உள்ளன. கேரளாவில் உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் நடத்திய சோதனைகளில் வாகனங்களில் விற்பனைக்காககொண்டுவரப்பட்ட மீன்களில் இந்த...

மீனவர்கள்

ராமேஸ்வரம் மீனவர்களின் கதி ஜூலை 12 தெரிய வரும்: இந்திய தூதரக அதிகாரி தகவல்

இலங்கை கடற்படையினாரால் கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்களின் நிலை என்னவென வரும் 12 ஆம் தியதி  தான் தெரியவரும் என இந்திய தூதரக அதிகாரி பாலச்சந்திரன் கூறியுள்ளார். கடந்த 5 ஆம் தியதியன்று கச்சத் தீவு அருகே  இரு படகுகளில் மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம்...

மீனவர்கள்

போராட்டத்துக்கு பிறகு விழிஞ்ஞம் துறைமுகத்துக்கு கன்னியாகுமரியில் இருந்து பாறாங்கல் எடுத்து செல்வது கைவிடப்பட்டது

குமரி மாவட்டம் தோட்டியோடிலிருந்து கேரளா மாநிலத்தின் கடற்கரை கிராமமான விழிஞ்ஞம் சுமார் 50 கிலோமீட்டர்கள்  தொலைவே இருக்கும். அதானிக் குழுமம், கேரள அரசுடன் இணைந்து 7525 கோடி செலவில் துறைமுகத் திட்டத்தை இங்கு தான் செயல்படுகிறது. கேரளாவில் அதிகம் விவாதிக்கப்பட்டு...

மீனவர்கள்

பெரும்பாக்கத்தை விரும்பாத பட்டினப்பாக்கம் மீனவர்கள்: உள்ளூரிலேயே வீடுகட்டித் தர வேண்டுகோள்

சென்னை மாநகரின் பட்டினப்பாக்கத்தை பொறுத்தவரை  மீனவர்கள் தங்கள் தூக்கத்தை தொலைத்துவிட்டனர் என்றே கூற வேண்டும். கடந்த மூன்றாண்டுகளுக்கு முன்பு வரை சுமார் 500 மீட்டருக்கு அப்பால் இருந்த கடல். தற்போது சுமார் 60 க்கும் மேற்பட்ட வீடுகளை கபளீகரம் செய்துள்ளது....

குற்றங்கள்

வளைகுடாவில் தமிழக மீனவர்களுக்கு பிராந்திய பிளவுகளினால் நெருக்கடி

கன்னியாகுமரி மாவட்டம் ராஜக்கமங்கலம் துறையில் வாடகை வீட்டில் வசிக்கும் செலீனின் குடும்பம், அவரது கணவர் ஜோசப்பின் உழைப்பை நம்பித்தான்  இருக்கிறது. கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னர் அவர்கள் குடும்பத்தினருக்கு தெரிந்த ஒருவர் மூலம் கிடைத்த விசா மூலம், ஈரானுக்கு சென்றவர்....

வணிகம்

கடலோர காவற்படை மூலம் மீனவர்கள் மீட்கப்பட்டனர்

சென்னை காசிமேட்டை சேர்ந்த மீனவர்கள் 9 பேர் கடந்த 17 ஆம் தேதி அதிகாலையில் மீன்பிடிப்பதற்காக ஆழ்கடலுக்கு சென்றிருந்தனர். காசிமேட்டை சேர்ந்த செங்குட்டுவன் எனபவருக்கு சொந்தமான கில் நெட் வகை படகில் , ராஜன் என்ற மீனவர் தலைமையில் சென்ற இந்த குழுவினருக்கு முதல் நாளே...

சமயம்

திருச்செந்தூரில் தமிழ் அர்ச்சகர்களுக்கு பாதிப்பு

திருச்செந்தூர் கோயிலில் பூஜை செய்து வரும் ஈஸ்வர ஐயருக்கு அது அவருடைய மூதாதையர்கள் பாரம்பரியமாக செய்து வரும் தொழில் என்பதால்  இயல்பாகக் கிடைத்த உரிமை என்கிறார். இதுதான் அவரின் வாழ்வாதாரம் மற்றும் வருமானத்துக்கான ஒரே வழியும் கூட. சென்னை உயர்நீதிமன்றம், கோயில்...

பண்பாடு

தூத்தூரில் பிறக்கும் மரடோனாக்கள் : குட்டி பிரேசிலான குமரி மீனவ கிராமம்

மழை பெய்து ஈரம் வடியவில்லை. தூத்தூரின் சின்னத்துறை ஜங்ஷனையொட்டிய மணற்பரப்பில் இளைஞர்கள் கூட்டம் கால்பந்தை எட்டி உதைத்தப்படி விளையாடிக் கொண்டிருந்தனர். காலில் ஷூக்கள் இல்லை. ஆனால் நீல நிற டீ ஷர்டும், அரைக்கால் நிக்கரும், ஒரு தேர்ந்த விளையாட்டு வீரனின் தோரணையில்...

குற்றங்கள்

தோட்டாவில் கலைந்து போன ஸ்னோலினின் கனவு

துப்பாக்கிச் சூடு நடந்த 5 தினங்களுக்குப் பின்னர், இன்மதி சார்பில் சென்ற பத்திரிக்கையாளர் குழுவிடம், ஸ்டெர்லைட் ஆலையை இழுத்து மூட வலியுறுத்தி எழுத வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைத்திருந்தார் காட்வின். அவரது ஒரே சகோதரியான ஸ்னோலினின் மரணத்தை விட, அவர் எதற்காக இறந்தாரோ...

சுற்றுச்சூழல்

ஸ்டெர்லைட்டை நிரந்தரமாக மூட தமிழக அரசு உத்தரவு

தூத்துக்குடியில் இயங்கி வந்த ஸ்டெர்லைட் காப்பர் ஆலையை  நிரந்தரமாக மூட தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசுவாமி உத்தரவிட்டுள்ளார். இதனையடுத்து, வருவாய் துறை அதிகாரிகள் அந்த ஆலையை பூட்டி சீல் வைத்தனர்.  இருப்பினும்,  இந்த  ஆலையானது ஏற்படுத்திய மாசினை சரி செய்யக் கேட்டு...

அரசியல்

தூத்துக்குடியில், ஒரு கோபம் தீவிரமாகியது

ராஜா, தூத்துக்குடி துறைமுக ஊழியர், மே 22, செவ்வாய்க்கிழமை காலை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தீ பற்றுவதையும், காவல்துறையினர் தங்கள் உடுப்புகளிலும், சாதாரண உடைகளிலும் நின்று கொண்டிருப்பதயும் கண்டார். பேரணியாக நடந்து சென்றவர்களில் ஒருவரான...

Pin It on Pinterest