மக்கள் ஆதரவில் மறுவாழ்வு பெற்ற தீர்த்தங்கரர் சிற்பங்கள்
தமிழ்நாட்டில் இராமநாத மாவட்டத்தில் தொலைதூரக் கிராமமான மேலரும்பூரில் ஒரு வயற்காட்டில் நீண்டநாட்களாகவே சீண்டுவார் யாருமின்றி சீரழிந்துக் கிடந்தன சிற்பங்கள் சில. அவை சமண சமயத்தின் முதல் தீர்த்தங்கரர் ரிஷபநாதரின் மற்றும் இறுதியும் 24-ஆவதுமான தீர்த்தங்கரர் மகாவீரரின் சிற்பங்கள். பத்தாம் நூற்றாண்டைச்...