வலங்கைமான் தந்த வினைஞன்
வருடா வருடம் பரிவாதினி கச்சேரிகளை ஒருங்கிணைப்பது எவ்வளவுக்கெவ்வளவோ மகிழ்ச்சியளிக்கக் கூடிய ஒன்றோ அதே அளவுக்கு ஆயாசம் அளிக்கும் வேலையும்கூட. இருப்பினும், மண்டி வரும் சோம்பலை உலுக்கித் துரத்த வைக்க வருடாந்திர பர்லாந்து விருதை நினைத்தாலே போதும். மனம் குதூகலிக்கத்...