Read in : English

Share the Article

ஒரு அரசியல் கட்சியிலும் செயலாற்றிக்கொண்டுதிரைப்படங்களிலும் தனக்கான நாயக பிம்பத்தைக் கட்டமைப்பது சாதாரண காரியமில்லை. திமுகவில் இளைஞரணித் தலைவராக இருப்பதோடு சினிமா தயாரிப்புநடிப்புவிநியோகம் என்று தான் முன்னர் செலுத்திய உழைப்பைத் தொடர்ந்து வருகிறார் உதயநிதி ஸ்டாலின். திமுக எதிர்க்கட்சியாக இருந்த பொழுதுகளில் மனிதன் தவிர்த்து மற்ற எல்லா படங்களிலும் ஹீரோயினுடன் டூயட்நகைச்சுவைநடனம் என்றே வழக்கமான இளம் நாயகனாகத் தன்னை வெளிப்படுத்தியவர். திமுக ஆளும்கட்சியாக இருக்கும் நேரத்தில் நுணுக்கமான சாதீய அரசியலை முன்வைக்கும் ‘நெஞ்சுக்கு நீதி’ கதையைத் தேர்ந்தெடுத்து நடித்திருப்பது ஆச்சர்யமான விஷயம். திமுக தலைவர் கருணாநிதிதனது வாழ்க்கை வரலாறு புத்தகத்துக்கு நெஞ்சுக்கு நீதி என்ற தலைப்பு வைத்திருப்பது இந்த சந்தர்ப்பத்தில் நமது நினைவுக்கு வராமல் போகாது.

இந்த படத்தில் அவரது நடிப்பு பொருத்தமாக இருக்கிறதாஇதே போன்ற அழுத்தமான கதைகளையும் களங்களையும் மட்டுமே எதிர்காலத்திலும் அவர் தேர்ந்தெடுப்பாராஇப்படிப்பட்ட கேள்விகளுக்கு உயிரூட்டியிருக்கிறதா இயக்குநர் அருண்ராஜா காமராஜின் ‘நெஞ்சுக்கு நீதி’.

திமுக ஆளும்கட்சியாக இருக்கும் நேரத்தில் நுணுக்கமான சாதீய அரசியலை முன்வைக்கும் ‘நெஞ்சுக்கு நீதி’ கதையைத் தேர்ந்தெடுத்து நடித்திருப்பது ஆச்சர்யமான விஷயம்.  

 கட்சி தொடங்குவேன் என்று பல ஆண்டுகளாகச் சொல்லிவந்த ரஜினி அந்த யோசனையைக் கைவிட்டபிறகு நடித்த ‘அண்ணாத்த’ கடந்த ஆண்டு வெளியானது. அரசியல் என்பதே எனது அகராதியில் கிடையாதென்ற கமல்ஹாசன், கட்சி தொடங்கியபிறகு நடித்திருக்கும் ‘விக்ரம்’ இன்னும் சில நாட்களில் வெளியாகவிருக்கிறது. கடந்த நாற்பதாண்டு கால தமிழ் திரையுலகில் இவர்களிருவருக்கும் அடுத்த இடத்தில் இருந்த விஜயகாந்த் உட்பட நாயக நடிகர்கள் எவரும் அரசியல்சினிமா என்ற இரட்டைக் குதிரையில் சவாரி செய்யவில்லை. இதற்கான ஒரேயொரு உதாரணமாக இருப்பது எம்ஜிஆர் மட்டுமே. வேண்டுமென்றால் எஸ்.எஸ்.ஆர். உள்ளிட்ட மிகச்சிலரை சொல்லலாம். ஆனாலும் இப்படி இரட்டை குதிரையில் சவாரி செய்ய வேண்டிய சூழலால் தான் சார்ந்த திராவிடக் கட்சியின் கொள்கைகளுக்கு எதிரான பல கதைகளை அவர் நிராகரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. எம்ஜிஆரால் மட்டுமே இந்தச் சவாலைத் திறம்பட சமாளிக்க முடிந்தது. கூடவேதிரைப்படங்களை மீறி தன்னை குறித்த பிம்பத்தை வலுவாக மக்களின் மனதில் எழுப்ப முடிந்தது.

தனது திரையுலக வாழ்க்கை தொடங்கிய மிகச்சில ஆண்டுகளிலேயே அரசியல் களத்திலும் பொறுப்புகளைச் சுமக்கத் தொடங்கியிருக்கும் உதயநிதிக்கும் அப்படியொரு சவால் உருவாகியிருக்கிறது. அதனைச் சமாளிக்கும் முதல் படியாக அமைந்திருக்கிறது ‘நெஞ்சுக்கு நீதி’.  திராவிட சார்புடையோர் ஆதரிக்கும் சமூகநீதியைத் திரையில் படரவிடுவது அபூர்வம். ’அனைவரும் சமம்’ எனும் வார்த்தைகள் இன்னும் சிலருக்கு எட்டாக்கனியாக உள்ளது என்பதைச் சொல்லும் ‘நெஞ்சுக்கு நீதி’ அதனைச் சாத்தியப்படுத்தியிருக்கிறது.

கூலி உயர்வு கேட்ட மூன்று சிறுமிகளை வலுக்கட்டாயமாக பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்குகிறது அதிகார வர்க்கம். அதில் இரண்டு பேர் தூக்கிலேற்றி கொல்லப்படஒரு சிறுமி மட்டும் தப்பிச் செல்கிறார். அவரைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்குகிறது காவல் துறை. அதிகார வர்க்கத்திற்கும் மேல்சாதி என்று சொல்லப்படுவோருக்கும் ‘ஜால்ரா’ தட்டுபவர்கள் அத்துறையில் செயல்படும் நிலையில்எதிர்ப்புகளை மீறி துணிந்து அந்த சிறுமி என்னவானார் என்பதைப் புதிதாக பதவியேற்ற துணை காவல் கண்காணிப்பாளர் கண்டறிவதே இப்படத்தின் கதை.

மேலோட்டமாக பார்த்தால்இக்கதை வழக்கமான நாயகனின் சாகசங்களைச் சொல்வதாகத் தோன்றும். ஆனால்ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பில் நிலவும் சாதீய அடக்குமுறைகள்ஒடுக்கப்பட்டோரின் வலி நிறைந்த வாழ்வுமேல்தட்டு வாழ்வனுபவங்களுடன் இப்பரப்புக்குள் நுழையும் ஓர் இளைஞனின் மனப்போக்கு என்று பலவற்றைச் சொன்ன வகையில் கவனம் ஈர்த்தது அனுபவ் சின்ஹா இயக்கத்தில் ஆயுஷ்மான் குரான நடித்திருந்த ‘ஆர்ட்டிகிள் 15’. 2015வாக்கில் உத்தரப்பிரதேசத்தில் நிகழ்ந்த தலித் சிறுமிகள் இருவர் படுகொலையை மையப்படுத்தி உருவானது இப்படைப்பு. இதன் ரீமேக்தான் ‘நெஞ்சுக்கு நீதி’.

இந்துத்துவத்தை மையப்படுத்தி அரசியலாட்டம் நிகழும் ஒரு மாநிலத்தின் நிலைமையும்பெரியார் போன்றவர்களின் செயல்பாடுகளால் அதிகபட்சமாக சமூகநீதியை நடைமுறையில் கொண்டிருக்கும் தமிழ்நாட்டின் சூழலும் எப்படி ஒன்றாகும்இந்த கேள்விக்குப் பதிலளிக்கும் வகையில்இப்போதும் தமிழ்நாட்டில் தலித் சமூகத்தவர்கள் எத்தகைய புறக்கணிப்புகளுக்கு ஆளாகின்றனர் என்பதைச் சொல்லியிருக்கிறார் இயக்குநர் அருண்ராஜா காமராஜ். கூடவேநம் சமூகத்தில் மட்டுமல்லாமல் அரசுத்துறைகளிலும் சாதீயம் எந்தளவுக்கு ஊடுருவியுள்ளது என்பதையும் காட்டியிருக்கிறார். மூலக்கதைக்குச் சேதாரம் இல்லாமலும்கதைக்களம் நமக்கு அந்நியமாகத் தெரியாமலும் இருப்பதற்கு அவர் செலுத்தியிருக்கும் உழைப்பு நாயகன் உதயநிதியின் திரைப் பிம்பத்தை கட்டமைக்க வெகுவாக உதவியிருக்கிறது.

 ’என்னதான் எல்லா பொணத்தையும் இங்க நாம எரிச்சாலும் நம்ம பொணம் தரையிலதான் எரியணும்’, ’என்ன கோட்டாவுல டாக்டர் கோட் போட்டவாளா’, ’எல்லோரும் சமம்னா இங்க யாரு சார் ராஜா’, ’நீங்க கொட்ட கொட்ட நாங்க அள்ளனுமா’ என்று பல இடங்களில் வசனங்கள் கேள்விகளாகவும் பதில்களாகவும் மாறி மாறி வந்து கைத்தட்டல்களை அள்ளுகின்றன. இதற்காகஇயக்குநர் அருண்ராஜாவுக்கும் வசனகர்த்தா தமிழரசன் பச்சமுத்துவுக்கும் பாராட்டுகளை சொல்லியாக வேண்டும்.

தொடக்கத்தில் வரும் பாடல் முழுக்க ஒடுக்கப்பட்டவர்களை பெரும்பான்மை சமூகம் எவ்வாறு நடத்துகிறது என்பதைச் சொல்லும். ஊருக்குப் புதிதாக வரும் நாயகன் ‘டீ சாப்பிட வேண்டும்’ என்று சொல்லவாகனமோட்டும் காவலர் ‘சார் இங்க பன்னிங்க அதிகம் மேயும்’, ‘பழைய சோறு வாசமடிக்கும்’ என்று சொல்லுவார். அதே காட்சியில் ‘ஊருக்குள்ள வந்துட்டேன் அம்பேத்கர் சிலை இருக்கு’ என்று நாயகன் சொல்ல, ‘அது கூண்டுக்குள்ள இருக்கா தனியா இருக்கா’ என்று போனில் கேள்வி எழுப்புவார் நாயகி. என்னதான் சாதி ரீதியான ஒடுக்குதல்கள் தமிழ்நாட்டில் குறைவென்றாலும் சாதியினர் இடையிலான மோதல்கள் இன்றும் இருப்பதைக் காட்டும் இக்காட்சி.

பிரேதப் பரிசோதனை செய்யும் ஒரு இளம் பெண் மருத்துவரின் பெயர் அனிதா என்றிருக்கிறது. ‘எங்க பொண்ணு ஒண்ணு சத்துணவு சமைச்சாங்கற காரணத்துக்காக 150 குழந்தைங்க சாப்பிடுற சாப்பாடை கீழே கொட்டுனாங்க’ என்ற வசனம் கோவிட்-19க்கு முன்னர் கோவை வட்டாரத்தில் ஏற்படுத்திய சலசலப்பைப் பிரதிபலிக்கிறது. இன்னொரு காட்சியில்தமிழ்நாட்டில் தூய்மைப் பணியாளர்கள் சாக்கடையினுள் இறங்குவதை தடை செய்து எட்டாண்டுகள் ஆகிவிட்டதாகச் சொல்லப்படும். இது போன்று தமிழ்நாட்டில் தொடரும் சில சமூக அவலங்களையும்அதையும் தாண்டி கோலோச்சும் சமூகநீதியின் பாங்கினையும் பொதிந்து வைத்துள்ளது திரைக்கதை.

இத்திரைப்படத்தில் உதயநிதியின் நடிப்பை கண்டிப்பாக ஆயுஷ்மான் குரானா உடன் ஒப்பிட முடியாது. ஆனாலும்புதிதாக படம் பார்க்கும் ஒருவருக்கு அவரது இருப்பு செயற்கையாகத் தோன்றாது. அந்த அளவுக்குஅவர் நடித்த ‘விஜயராகவன்’ பாத்திரம் வார்க்கப்பட்டிருக்கிறது. தான்யாஇளவரசுரமேஷ் திலக்ஆரிமயில்சாமிஷிவானி ராஜசேகர் உட்பட பலரையும் தாண்டி திரையில் ஜொலிக்கிறார் சுரேஷ் சக்கரவர்த்தி. அவர் நடித்த ‘சுந்தரம்’ எனும் பிராமணர் பாத்திரம் திரையரங்குகளுக்கு வெளியேயும் பல அதிர்வலைகளை ஏற்படுத்தக்கூடும்.

தொழில்நுட்பம் சார்ந்த உழைப்பைப் பொறுத்தவரை தினேஷ் கிருஷ்ணனின் ஒளிப்பதிவுரூபனின் படத்தொகுப்பு உட்பட பலவற்றிலும் சிறப்பான வெளிப்பாடு கிடைத்திருக்கஅவற்றையெல்லாம் மிஞ்சி நிற்கிறது திபு நினண் தாமஸின் இசை. பல காட்சிகளில் திரைக்கதைக்கு மேலும் ஒரு அங்குலம் உயரத்தை தருகிறது பின்னணி இசை.

இவர்கள் அனைவரையும் தாண்டி, ‘இது அருண்ராஜா காமராஜின் படைப்பு’ என்று சொல்லத்தக்க வகையில் பல இடங்களில் தனித்துவம் தெரிகிறது. ஒரிஜினலை வெகுவாக மீறவில்லை என்பதால்இடைவேளைக்குப் பிறகான திரைக்கதை சுணக்கத்திற்கு அவரை மட்டும் பொறுப்பாக்க முடியாது. ஆனாலும்அழுத்தமான கதையொன்றை எதிர்பார்ப்பவர்களுக்கு இப்படம் கண்டிப்பாக தீனி போடும்.

திரைக்கதையில் ஒடுக்கப்பட்டோருக்கான சாதிக்கட்சிகள் அவர்களைப் பயன்படுத்திக் கொள்கின்றன என்று சொல்லுமிடம்நிச்சயம் திமுக சார்பு மனநிலையை வெளிப்படுத்தும் இடம். அதே நேரத்தில்எந்த இடத்திலும் அவர் சார்ந்த திமுகவின் சின்னமோ அது சார்ந்த குறிப்புகளோ படத்தில் இடம்பெறவில்லை.  

 ’ஆர்ட்டிகிள் 15’ படத்தில் நாயக பாத்திரம் பிராமண சமூகத்தவராக காட்டப்பட்டிருக்கும். அதேபோலபார்க்கும் நபர்களிடம் சாதி என்னவென்று கேட்பதாக வடிவமைக்கப்பட்டிருக்கும். வட இந்தியாவில் பெயர்களுக்கு பின்னால் சாதியும் குறிப்பிடப்படுவதால்அது குறித்து நாயகனுக்கு புரிதல் கிடையாது என்பதைச் சொல்ல அக்காட்சி உதவியிருக்கும். ‘நெஞ்சுக்கு நீதி’யில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் மட்டுமே அது பயன்படுத்தப்பட்டுள்ளது.

நிரம்ப படித்தாலும் இந்தியாவின் உண்மையான முகத்தைச் சாதாரண கிராமங்களில் மட்டுமே அறிய முடியும் என்பதை அனுபவப்பூர்வமாக அணுகும் பாத்திரம் உதயநிதியினுடையது. இதன் வழியே நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறத்தைச் சேர்ந்த தனது ஆதரவாளர்களைரசிகர்களை அவர் எளிதாகத் திருப்திப்படுத்தியிருக்கிறார். போலவேஅவர் ஸ்லோமோஷனில் வந்து திரைக்கதையில் திருப்பங்களை உருவாகும் காட்சிகளும்கூட இதில் இருக்கின்றன என்பது கூடுதல் சிறப்பு.

நியூட்ரல்ங்கறது என்னை பொறுத்தவரைக்கும் நடுவுல இருக்கறதில்ல நியாயத்தோட பக்கம் இருக்கறது’, ‘அம்பேத்கரை இங்க பல பேரு சாதிக்கட்சித் தலைவரா பார்க்குறாங்க’, ‘அதுங்கன்னு சொல்றீங்க அவங்க என்ன ஆடா மாடா’ என்பது உட்பட பல வசனங்கள் அவருக்கான நாயக பிம்பத்தை வடிவமைக்கின்றன. நேர்மையோடும் நியாயத்தோடும் தீரத்தோடும் சமூகநீதியைக் கட்டிக் காப்பாற்றுபவர் என்ற எண்ணத்தை உருவாக்குகின்றன.

திரைக்கதையில் ஒடுக்கப்பட்டோருக்கான சாதிக்கட்சிகள் அவர்களைப் பயன்படுத்திக் கொள்கின்றன என்று சொல்லுமிடம்நிச்சயம் திமுக சார்பு மனநிலையை வெளிப்படுத்தும் இடம். அதே நேரத்தில்எந்த இடத்திலும் அவர் சார்ந்த திமுகவின் சின்னமோ அது சார்ந்த குறிப்புகளோ படத்தில் இடம்பெறவில்லை. இதன் மூலமாகஒரிஜினலை அவரது இருப்பு சிதைக்கவில்லை என்பதும் குறிப்பிடப்பட வேண்டிய அம்சம். இதுநாள்வரை ஜீவாஆர்யாசிவகார்த்திகேயன் உட்பட சமகால நாயகர்கள் சிலரை முன்மாதிரியாக கொண்டே தான் நடித்த படங்களைத் தேர்வு செய்து வந்திருக்கிறார் உதயநிதி. அதில் மாற்றம் வரும் என்பதைச் சொல்லியிருக்கிறது இத்திரைப்படம்.

இப்பல்லாம் யாரு சார் சாதி பார்க்கிறா’ என்ற கேள்விக்கு பதிலாக பரியேறும்பெருமாள்அசுரன் உட்பட பல படங்கள் தமிழில் வந்திருக்கின்றன. தமிழ் திரைப்படங்கள் வெளியாகி கிட்டத்தட்ட 70 ஆண்டுகளுக்கும் மேலாக துணை பாத்திரங்களாகவும் கூட்டத்தில் ஒருவராகவும் காட்டப்பட்ட ஒரு சமூகத்தை முதன்மைப்படுத்தி பல கதைகள் தயாராகின்றன. அதிலிருந்து சிறிதே வேறுபட்டுஒடுக்கப்பட்ட சமூகத்தினரை தம்மில் ஒருவராகப் பார்க்க வேண்டுமென்ற எண்ணம் பிற சமூகத்தவர்களிடம் பெருக வேண்டுமென்ற சொன்ன வகையில் கவனம் ஈர்க்கிறது ‘நெஞ்சுக்கு நீதி’.

இதன் மூலமாகதான் பேசும் திராவிட அரசியலில் இருந்து விலகாமல் திரையிலும் செயல்புயலாக உலா வந்திருக்கிறார் உதயநிதி. அவரது அடுத்தடுத்த படங்களிலும் இது தொடர வேண்டும். இல்லாமற் போனால்அரசியலும் திரைப்படமும் வேறு வேறு என்று எண்ணுவது போலாகிவிடும். அதுஇரண்டிலுமே அவரது இருப்பை கேள்விகளுக்குள்ளாக்கும். அந்த வகையில்சிறப்பாக முதல் அடியை பதிய வைத்து உதயநிதிக்கு ஒரு பெரும் சவாலை முன்வைத்திருக்கிறது ‘நெஞ்சுக்கு நீதி’!


Share the Article

Read in : English