Read in : English

Share the Article

தங்கராசு நடராஜன் மறுஅவதாரம் எடுத்த பீஸ்ட்ஆகி விட்டார். மட்டையருகே சென்று பிட்ச் ஆகும் பந்தை (யார்க்கர்) வீசும் அற்புதமான ஸ்பெஷலிஸ்ட்டாக இருந்து படுவேகமான, வழுக்கிவிழச் செய்யக்கூடிய ஒரு மரணப் பந்துவீச்சாளராக அவர் தன் ஆட்டத்திறனை வளர்த்தெடுத்துள்ளார், காயத்திலிருந்து குணமாகி மீண்டுவந்த பின்பு.

புள்ளிவிவரங்கள் பொய் சொல்வதில்லை.

முன்னாள் டென்னிஸ் பந்து கிரிக்கெட் ஆட்டக்காரரான நடராஜன் இதுவரை சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் (எஸ்ஆர்எச்) அணிக்காக ஏழு ஆட்டங்கள் ஆடியிருக்கிறார்; 162 பந்துகள் வீசியிருக்கிறார்; அவற்றில் பெரும்பாலும் யார்க்கர்களும், மரணவீச்சுக்களும், ஸ்லோ கட்டர்களும்தான்; 218 ரன்கள் எடுக்க விட்டிருக்கிறார்; 14.53 என்ற சராசரி விகிதத்தில் 15 விக்கெட்டுகள் வீழ்த்தியிருக்கிறார். அவரது ஈகானமி விகிதம் 8.07; மும்பை, புனே ஆகிய பேட்ஸ்மென்களுக்கு இணக்கமான பிட்சுகளில் வெளிப்பட்ட அவரது கட்டுப்பாடான பந்துவீச்சுக்கு அது ஒரு நல்ல சான்று.

ஒரே பயணத்தில் மூன்றுவிதமான வடிவங்களிலும் அறிமுகமான முதல் இந்தியன் என்ற பெருமையுடன் தனது வருகையை அறிவித்தவர் நடராஜன்.

காயம்பட்ட காரணத்தினால் கடந்த கிரிக்கெட் சீசனின் பெரும்பகுதியையும், டி-20 உலகக் கோப்பை ஆட்டத்தையும் அவர் இழந்திருக்கிறார் என்பதை மனதில் வைத்துப் பார்க்கும்போது, அவரது மீள்வருகைச் சாதனை குறிப்பிடத்தக்கது. அவர் மட்டும் காயம்பட்டு உற்சாகத்தை இழக்காமல் இருந்திருந்தால், அணிப்பட்டியலின் முதல் பெயர்களில் ஒன்றாக அவரது பெயர் இருந்திருக்கும். ஆனால் நட்டு இப்போது ஆசைதீர பந்துவீசிக் கொண்டிருக்கிறார். ஐபிஎல்-லில் அதிகமான விக்கெட் எடுப்பவர்கள் பட்டியலில் அவர் இப்போது இரண்டாவது இடத்தில் இருக்கிறார். ஊதாத் தொப்பிக்கான பந்தயத்தில் அவர் ராஜஸ்தான் ராயல்ஸ் சகாலுக்குப் பின்னே நிற்கிறார்.

நடராஜனின் இரண்டாம் வருகை என்னும் நெருப்புக்கு நெய்வார்ப்பது எது? ஆஸ்ட்ரேலியாவில் டி-20 உலகக் கோப்பைக்காகத் திட்டமிட வேண்டும் என்ற அவரது ஆசைதான் அந்த நெய். ஒரு ஆட்டஆய்வின் போது சுனில் கவாஸ்கர் ஸ்டார் ஸ்போர்ட்ஸிடம் சொன்னது இது: “அவரை (நடராஜனை) மீண்டும் பார்ப்பது நன்றாக இருக்கிறது. ஏனென்றால் இந்தியஅணி அவரை இழந்தது போலத் தோன்றியது. போட்டியில் அவர் மீண்டும் கலந்துகொள்வது நன்று. 16-ஆவது ஓவருக்கும் 20-ஆவது ஓவருக்கும் மத்தியில் அவர் பந்துவீசும் பாணியைப் பார்த்தால் அவர் போட்டியில் ஜெயித்துவிடுவார் (உலகக் கோப்பைக்கான போட்டியில்) என்று எனக்கு நிச்சயமாகத் தெரிகிறது.”

ஆரம்பகாலங்களில் இதெல்லாம் நட்டுக்கு ஒரு கனவாகத்தான் இருந்தது. இந்திய அணியில் அறிமுகமான போது அவர் முதல் தேர்வு பந்துவீச்சாளர் கூட கிடையாது. டி-20 இண்டர்நேஷனல் போட்டிகளில் காயம்பட்டிருந்த தமிழர் வருண் சக்ரவர்த்திக்குப் பதிலாகத்தான் அவர் வந்தார். டி-20 இண்டர்நேஷனல் போட்டிகள் முடிந்தவுடன், அவர் ஒரு நெட் பவுலராக பின்தங்கிவிட்டார். உமேஷ் யாதவ் பின்னங்கால் காயம்பட்டதால்தான் அவர் டெஸ்ட் அணிக்கு வந்தார்.

காயம்பட்ட காரணத்தினால் கடந்த கிரிக்கெட் சீசனின் பெரும்பகுதியையும், டி-20 உலகக் கோப்பை ஆட்டத்தையும் அவர் இழந்திருக்கிறார் என்பதை மனதில் வைத்துப் பார்க்கும்போது, அவரது மீள்வருகைச் சாதனை குறிப்பிடத்தக்கது.

நடராஜன் தன் குழந்தையின் பிறப்பை நேரில் சென்று பார்க்கத் தவறிவிட்டார். காரணம் அப்போது அவர் ஆஸ்ட்ரேலியாவில் இருந்தார்.

ஒருநாள் அனைத்துலக (ஓடிஐ) போட்டிகளில் முதன்முதலில் களமிறங்கிய நடராஜன் 2/70 என்று ஸ்கோர் செய்தார். மூன்று டி-20 இண்டர்நேஷனல் போட்டிகளில் 6 விக்கெட்டுகள் விளாசினார். விளையாண்ட எல்லா அறிமுக ஆட்டங்களிலும் விக்கெட்டுகள் எடுத்து அந்தத் தொடரை அவர் முடித்தார். ஒரே பயணத்தில் மூன்றுவிதமான வடிவங்களிலும் அறிமுகமான முதல் இந்தியன் என்ற பெருமையுடன் தனது வருகையை அறிவித்தவர் அவர்.

நடராஜனின் கதை கனவுகளுக்கான சரக்கு என்று சேவக் சொன்னார். காயம்பட்டு ஏற்பட்ட பின்னடைவுக்குப் பின்பும்கூட அந்தக் கனவுக்கதை தொடரும் சாத்தியத்தைக் கொண்டிருக்கிறது.

சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் அணியினர் இந்த வருடம் வெற்றிபெற தங்கள் பலத்தைத் தொடர்ந்து மேம்படுத்திக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் நடராஜனின் பங்கு அதிமுக்கியம். யார்க்கர் பந்துகளை வீசி இறுதிக்கு முந்திய ஓவர்களில் அவர் ஆடப்போகும் அந்தப் ‘பிரபஞ்ச ஊழித்தாண்டவம்’ ஐபிஎல்லின் நாடோடிக் கதைகளில் அங்கம் வகிக்கும். ஆஸ்ட்ரேலியாவில் ஏதோ சில குதிக்கால்களை அவர் உடைப்பதைப் பார்க்கக் காத்திருக்கும் பொறுமை எங்களுக்கு இல்லை.


Share the Article

Read in : English