Read in : English

Share the Article

நம்மில் பெரும்பாலானோர் வெதுவெதுப்பான நீர், எலுமிச்சை சாறு, பச்சைத் தேநீர், எலுமிச்சை கலந்த தேநீர் அல்லது இலவங்கப்பட்டை தேநீர் ஆகியவற்றில் தேன் கலந்து குடித்து நாளைத் தொடங்குகிறோம். தேன்கூட்டிலிருந்து பிரிக்கப்படும் தேன் நமது மனித வாழ்வில் பிரிக்க முடியாத பங்கு வகிக்கிறது.

தேன், இந்த வார்த்தையைக் கேட்டாலே இனிக்கிறது. தேனின் மென்மை, நறுமணம், சுவை நம்மை இழுக்கிறது. எல்லாவிதமான தேனுக்கும் ஒருவிதமான சுவை இருக்கிறதா என்றால் நிச்சயமாக இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். தேனின் சுவை அது எங்கிருந்து கிடைக்கிறது என்பதைப் பொருத்தது. மோனாப்ளோரல் அல்லது மல்டிப்ளோரல் மூலம் கிடைக்கும் தேன் நிறம்.  சுவை மற்றும் நமது ஆரோக்கியத்தை பாதிக்கிறது. ஏன் இப்படி? இதற்கு காரணம் குளூகோஸ் மற்றும் ப்ரக்டோஸ் இரண்டின் விகிதம்தான். தாதுக்கள் மற்றும் அமினோ அமிலங்கள் மற்றும் வெவ்வேறு பிராந்தியங்களில், வெவ்வேறு பருவங்களில் வளரும் பூக்களிலிருந்து சேகரிக்கப்படும் தேன் ஆகியவை காரணமாக இந்த வேறுபாடு ஏற்படுகிறது.

தேன் ஒரு செயல்பாட்டு உணவாகும். அது ஆரோக்கியமானது. பயன் அளிக்கக்கூடியது. பதப்படுத்தப்படாத தேனுக்கு இயற்கையாகவே நோய் எதிர்ப்பு சக்தி உண்டு.

தேன் ஒரு இயற்கைப் பாதுகாப்பு

தேன் ஒரு செயல்பாட்டு உணவாகும். அது ஆரோக்கியமானது. பயன் அளிக்கக்கூடியது. அத்துடன், உணவில் இயற்கை பாதுகாப்பாளராகச் செயல்படுகிறது. முன்னாள் சோவியத் குடியரசில் ஒன்றான ஜார்ஜியாவில், அலாசானி நதிகளில், வெண்கல யுகத்தில் பெர்ரி பழங்கள் தேனில் ஊறவைக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டிருந்ததை தொல்லியல் ஆய்வாளர்கள் கண்டுபிடித்ததை நாம் அறிவோம். இவை 4,300 ஆண்டுகள் பழமைவாய்ந்தவை என்றாலும் பெர்ரி பழமும் தேனும் நிறம் மாறாமல் பாதுகாக்கப்பட்டிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தும் விஷயம். அதுதான் தேனின் குணம். உப்பைப் போலவே தேனும் உணவுப் பாதுகாப்பாளராகச் செயல்படுகிறது. ஆஸ்மோடிக் டீஹைட்ரேஷன் முறையில் இவை பாதுகாக்கப்படுகிறது. தேன் சேர்க்கப்படும் பழங்கள் அல்லது காய்கனிகளில் உள்ள நீர், தேனில் உள்ள சர்க்கரைகளால் மாற்றப்படும். இதனால் நுண்ணுயிரிகள் மூலம் தீங்கு ஏற்படுவது தடுக்கப்படும். இத்தகைய பாதுகாப்பு நடைமுறைகளில் சேதமடைந்த பொதிகள் அல்லது கன்டெய்னர்களில் அதிகப்படியான வளிமண்டல ஈரப்பதம் உறிஞ்சப்பட்டு தேனில் உள்ள நீரின் உள்ளடக்கத்தை அதிகரிக்கும். இதன் காரணமாக பாக்டீரியாவின் வளர்ச்சியைத் தடுக்க முடியாது. எனவே தேனை பாதுகாக்கும் பொருளாகப் பயன்படுத்தினால், காற்று புகாத பேக்கிங் அவசியமாகும். நெல்லிக்காய், இஞ்சி, பெர்ரி பழங்கள் பெரும்பாலும் தேனை பயன்படுத்தியே பாதுகாக்கப்படுகின்றன. இப்படி தயாரிக்கப்படும் பொருள்கள் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு நல்லவை. மற்றொரு புறம் தேனின் இந்த ஈரப்பதத்தை உறிஞ்சும் தன்மை ரொட்டிகள், கேக்குகள், குக்கிகள் மற்றும் மிட்டாய் போன்ற பேக்கரி பொருள்களுக்கு புத்துணர்ச்சி அளிக்கிறது.

நோய் தீர்க்கும் மருந்து தேன்

பதப்படுத்தப்படாத தேனுக்கு இயற்கையாகவே நோய் எதிர்ப்பு சக்தி உண்டு. இ-கோலி, கிலோஸ்டிரிடியம், சல்மோனெல்லா ஆகியவற்றுக்கு பாக்டீரியா எதிர்ப்பு விளைவுகளைக் கொண்டுள்ளது.

தேனில் ஒலிகோசாக்கரைடுகள் உள்ளன: ராஃபினோஸ், ட்ரெஹலோஸ் இது குடல் மைக்ரோஃப்ளோராவிற்கு ப்ரீபயாடிக்குகளாக செயல்படுகிறது, குறிப்பாக வயிற்றுப்போக்கால் பாதிக்கப்பட்டவர்களை மேம்படுத்துகிறது. மாதுளம்பழத்தோல் பொடியுடன் தேனை எடுத்துக்கொள்வது இப்போது உங்களுக்கு நினைவிருக்கும். தேனில் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் உள்ளன.  தேனின் ஆக்ஸிஜனேற்ற தன்மைக்கு பூக்களில் உள்ள ஃபாலிபினோலிஸ்தான் காரணம்.

தேவை அடிப்படையில் மோனோஃப்ளோரல் தேனைப் பெறலாம் மற்றும் அதை பிரத்யேகமாக சிகிச்சைகளுக்கு மருந்தாகப் பயன்படுத்தலாம். பூவில் இருந்து எடுக்கப்படும் தேன் ஆயுர்வேத மருத்துவத்தில் ஒரு முக்கிய மூலப்பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. தேன் உண்மையில் ஒரு உணவாகும்.  இது அதன் குணப்படுத்தும் பண்புகளுக்காக மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது. சுஸ்ருதா சம்ஹிதாவின் கூற்றுப்படி தேன் எட்டு வகைப்படும். அதாவது அது செய்யும் செயல்பாட்டின் அடிப்படையில் தேன் வகையை உருவாக்கும் தேனீக்களின் அடிப்படையில். அவை பௌத்திகா, பிரமரா, க்ஷௌத்ரா, மக்ஷிகா, சத்ரா,

அர்க்யா, ஔடலகா மற்றும் தல மது எனப்படும். மற்ற நாடுகளில், மோனோஃப்ளோரல் தேன் அடிப்படையில் பல்வேறு வகையானது. வர்த்தக ரீதியாக கிடைக்கும் சில கனடிய மோனோஃப்ளோரல் தேன் ராஸ்பெர்ரி ஆகும்

மலரும் தேன்,  நீல பெர்ரி மலரும் தேன், பக்வீட் தேன். இதேபோல், இந்தியாவில், அஜ்வைன் தேன், க்ளோவர் தேன் போன்ற பல்வேறு வகையான மூலிகைத் தேன் வணிக ரீதியாகக் கிடைக்கிறது.  அவை குறிப்பிட்ட நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படுகின்றன.

புதிய தேன் (Photo Credit): Marco Verch Professional Photographer

மருந்துப் பொருளாகத் தேன்

உள் நுகர்வு மட்டுமல்ல, வெளிப்புற காயங்களுக்கும் தேன் ஒரு நல்ல மருந்தாகும். நோய்க்கிருமிகளால் ஏற்படும் பாதிப்புகளை தடுக்கவும், திசுக்களை மீளுருவாக்கம் செய்து அதன் வளர்ச்சிக்கும் தேன் உதவுகிறது. பழங்காலத்தில் தோல்கள் மீது ஏற்படும் தீக்காயங்கள் மீது தேன் தடவப்படும். இதற்கு புண்களை ஆற்றும் தன்மை உள்ளது. தேனில் உள்ள ஹைட்ரஜன் பெராக்ஸைடு, தேன் பூசப்பட்ட மருத்துவ பேண்டேஜுகள் மூலம் குணப்படுத்தும் தன்மை கொண்டது. வர்த்தக ரீதியிலான இருமல் மருந்துகளைப் போல, தேன் இருமலை அடக்கும் மருந்தாகவும் செயல்படுகிறது. சுவாசக் கோளாறு உள்ள குழந்தைகள் நன்றாக தூங்கவும் தேன் உதவி செய்கிறது. அந்தக் காலத்தில் பயணிகள் உண்ணும் உணவில் தேனும் அடக்கம். அடிக்கடி பயணம் செல்பவர்கள் தேனை கையில் எடுத்துச் செல்வார்கள். வாழ்க்கைப் பயணம் முடிந்த பிறகும் இறந்தவர்களை பாடம் செய்ய தேன் பயன்படுத்தப்படுகிறது. அலெக்சாண்டர் இறந்தபோது அவரது உடல் தேனில் பாடம் செய்யப்பட்டு அவரது நாட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

நச்சுத்தேன்

தேன் பற்றிய மற்றொரு சுவாரசியமான உண்மை என்னவெனில் அது நச்சுத்தேன் அல்லது விஷத்தேன், புளிக்கவைக்கப்பட்ட தேன் என்று அழைக்கப்படுகிறது. தேன் சேகரிக்க வரும் பயிர்களில் பூச்சிக் கொல்லிகள் பயன்படுத்துவதன் காரணமாக நச்சுத் தேன் உருவாகலாம். சில சமயங்களில் தேன்கூட்டிலேயே தேன் புளிக்கவைக்கப்படுகிறது அல்லது ஒரு வகை மது தயாரிக்கவும் தேன் புளிக்கவைக்கப்படுகிறது. சர்வதேச அளவில் நேபாளம், துருக்கி போன்ற நாடுகளில் ஒருவகை மது தயாரிக்க புளிக்கவைக்கப்பட்ட தேன் பயன்படுத்தப்படுகிறது.  சில சமயங்களில் நச்சுத்தன்மை வாய்ந்த தேனை தேனீக்கள் உருவாக்குகின்றன. இதில் கிரேனோடாக்சின்கள் உள்ளன. இந்த தேன் தேனீக்களுக்கு தீங்கு விளைவிக்காது. ஆனால், மனிதர்களுக்கு தீங்கு ஏற்படுத்தும். எரிகாசீசியா குடும்பத்திலிருந்து தேன் சேகரிக்கும் போது இத்தகைய தேன் கிடைக்கும். இந்த நச்சுத்தேன் போர் காலங்களில் பயன்படுத்தப்பட்டது. எதிரிகளின் உணவை விஷமாக்கும்போது நுகர்வோருக்கு வாந்தி, சுயநினைவு இழத்தல் போன்றவை ஏற்படும்.

உள் நுகர்வு மட்டுமல்ல, வெளிப்புற காயங்களுக்கும் தேன் ஒரு நல்ல மருந்தாகும். நோய்க்கிருமிகளால் ஏற்படும் பாதிப்புகளை தடுக்கவும், திசுக்களை மீளுருவாக்கம் செய்து அதன் வளர்ச்சிக்கும் தேன் உதவுகிறது.

தேனில் கலப்படம்

தற்காலத்தில் சுத்தமான தேன் கிடைப்பதில்லை. ஒன்று நீர்த்துப் போகின்றன. அல்லது கலப்படம் செய்யப்படுகின்றன. எல்லாவற்றிலும் கலப்படம் வந்துவிட்ட பிறகு, தேன் மட்டும் விதிவிலக்கா என்ன? மலர்களிலிருந்து தேனீக்களால் உறிஞ்சி எடுக்கப்படுவதுதான் இயற்கையான இனிப்பான தேன் என்று இந்திய உணவுப் பாதுகாப்புத் தர அமைப்பு (திஷிஷிகிமி) வரையறுத்துள்ளது. இன்னும் சொல்லப்போனால், தேன்கள் சேகரிக்கப்பட்டு அவை தேன்கூட்டில் சேகரிக்கப்பட்டு பழுக்கவைக்கப்படுபவை. ஒரு பொருளை தேன் என்று விற்பனை செய்தால் அதில் உணவுப் பொருள்களின் பிற்சேர்க்க இருக்கக்கூடாது. இந்திய உணவுப் பாதுகாப்புத் தர அமைப்பு நிர்ணயித்துள்ளபடி, அதன் தரம் பாதிக்கப்படும் அளவுக்கு சூடாக்கவோ பதப்படுத்தவோ கூடாது. வீட்டிலேயே தேனின் தரத்தை சோதித்துவிடலாம். சுத்தமான தேன் தொண்டையில் ஒரு சுவை அல்லது லேசான எரிச்சல் உணர்வை ஏற்படுத்தும். சுத்தமான தேனை எரித்தால் வெளிர் பழுப்புநிறத்தில் சர்க்கரை உருவாகும். ஆனால், தரமற்ற அல்லது கலப்பட தேனை எரித்தால் நுரைதான் உருவாகும்.

டாக்டர் சந்தீப் ஜங்கு. தஞ்சாவூரில் உதவிப் பேராசிரியரான இவர், குவாஹாட்டியில் உள்ள நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் புட் டெக்னாலஜி ஆன்ட்ரபுரூனர்ஷிப் மேனேஜ்மெண்ட் அமைப்பின் தொடர்பு அலுவலர். பல்வேறு வகையான சர்க்கரைகளைச் சேர்த்து தேனில் கலப்படம் செய்யப்படுகிறது. சோதனைக் கூடங்களில் பரிசோதனை நடத்தியபோது தேனில் சி3 மற்றும் சி4 அளவு சர்க்கரை சேர்க்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. தேனில் மகரந்தங்கள் இருப்பதும் அதன் நம்பகத்தன்மையை பரிசோதிக்கும் வழியாகும். ஒவ்வொருவரும் வீட்டில் உணவாகப் பயன்படுத்த வேண்டிய பொருள்களில் தேனும் ஒன்று. தேனில் சர்க்கரையால் ஆன ஊட்டச்சத்துக் கலவை உள்ளது. தேனைப் பயன்படுத்தும்போது அது இயற்கையாவே வளர்சிதை மாற்றுத்துக்கு உதவுகிறது. அழகு சாதனப் பொருள்களாகவும் பயன்படுகிறது. தேனை சருமத்தில் தடவிக் கொள்வதால் சருமத்தை சுத்தப்படுத்தி ஈரப்பதத்தை ஏற்படுத்துவதால் சருமம் பளபளப்பாக இருக்கும். தேன் கலந்த நீரில் தலை முடியை அலசுவது கூந்தலை சீரமைத்து பளபளப்பாக வைத்திருக்க உதவுகிறது. தேனை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்படும் மெழுகுகள் முடியை அகற்றவும் பயன்படுகிறது. தேனை அதிகம் பயன்படுத்துபவர்கள் பெண்கள். அதனால்தான் அவர்களைக்கூட தேன் என்று அழைக்கிறோம் என்கிறார் அவர். உண்மைதானே!


Share the Article

Read in : English