Read in : English

Share the Article

அரசுப் பள்ளியில் தமிழ் வழியில் படித்த சாமானியக் குடும்பத்தைச் சேர்ந்த நகைத் தொழிலாளியின் மகனான எம். அரவிந்த் (28) அண்ணா பல்கலைக்கழகத்தின் கிண்டி பொறியியல் கல்லூரியில் அப்பேரல் டெக்னாலஜியில் பி.டெக். பட்டம் பெற்று, தற்போது கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் மார்க்கெட்டிங் மேனேஜராகப் பணியாற்றுகிறார். பின்தங்கிய வகுப்பைச் சேர்ந்த அவர், அந்தக் குடும்பத்தின் முதல் தலைமுறை பட்டதாரியும்கூட.

ஈரோடு கவுந்தப்பாடியைச் சேர்ந்தவர் அரவிந்த். அவரது அப்பா மனோகரன் நகை செய்யும் கூலித் தொழிலாளி. 9ஆம் வகுப்பு வரை படித்த அவர், தனது குடும்ப சூழ்நிலை காரணமாக படிப்பைத் தொடர முடியாமல் படிப்பை விட்டுவிட்டு வருமானத்துக்காக வேலைக்குச் சென்றுவிட்டவர். அவரது தாய் வெங்கடேஸ்வரி அவரும் பள்ளிப் படிப்பை எட்டிப் பார்த்ததில்லை. அவரது அக்கா 12ஆம் வகுப்பு வரை படித்தார். அப்புறம், அவருக்குத் திருமணமாகிவிட்டது. 30 ஆண்டுகளாக நகை செய்யும் தொழிலாளியாக வேலை பார்த்தும்கூட ஓட்டு வாடகை வீட்டில்தான் அவரது குடும்பம் இருந்தது. தன்னைப்போல தனது மகனும் கூலித் தொழிலாளியாகிவிடக்கூடாது என்று நினைத்து, தனது மகனை எப்படியாவது கல்லூரியில் படிக்க வைத்து நல்ல வேலையில் சேர்த்துவிட வேண்டும் என்பதில் அவரது அப்பா ஆர்வமாக இருந்தார்.

கவுந்தப்பாடியில் வீட்டுக்கு மிக அருகே உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் முதல் வகுப்பிலிருந்து 12ஆம் வகுப்பு வரை தமிழ் வழியில் படித்தார். பத்தாம் வகுப்புத் தேர்வில் 500க்கு 468 மதிப்பெண்கள் பெற்று பள்ளியிலேயே இரண்டாவது இடம் பெற்றார். கணிதத்தில் நூற்றுக்கு நூறு. அறிவியலில் 100க்கு 98. பிளஸ் டூ தேர்வில் கணிதம், இயற்பியல், வேதியியல், கம்ப்யூட்டர் சயின்ஸ் ஆகிய பாடப்பிரிவுகளை எடுத்துப் படித்தார்.

“பள்ளியில் படிக்கும்போதே எப்படியாவது பிளஸ் டூ தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெற்று கவுன்சலிங் மூலம் அரசு பொறியியல் கல்லூரி ஏதாவது ஒன்றில் சேர்ந்து படிக்க வேண்டும் என்பதுதான் எனது விருப்பம். அரசுக் கல்லூரியில் படிக்க வைப்பதற்கே கஷ்டம். தனியார் கல்லூரியில் என்றால் அந்த அளவுக்குப் பணம் புரட்ட முடியாது என்பது எனக்குத் தெரியும். அதனால், படிப்பில் தீவிரமாகக் கவனம் செலுத்தி அதிக மதிப்பெண்கள் பெற்றுவிட வேண்டும் என்று விரும்பினேன். அதனால் பள்ளியில் படித்தாலும்கூட, வீட்டிற்கு வந்து இரவு பத்து பதினோரு மணி வரை படிப்பேன். காலையில் 5 மணிக்கு எழுந்து படிப்பேன். எனது முயற்சிக்குப் பயன்கிடைத்தது. 2010ஆம் ஆண்டில் நடைபெற்ற பிளஸ் டூ தேர்வில் 1200க்கு 1108 மதிப்பெண்கள் பெற்று அந்தப் பள்ளியிலேயே முதல் மாணவராகத் தேர்ச்சி பெற்றேன்” என்கிறார் அவர்.

அரசுப் பள்ளியில் படிக்கும்போது கோச்சிங் மையங்களில் எதிலும் சேர்ந்து படிக்கவில்லை. அதற்கு உரிய வசதியும் எங்களது குடும்பத்துக்கும் இல்லை. நான் படித்த அரசுப் பள்ளியிலேயே வகுப்புகள் முடிந்ததும் ஸ்பெஷல் கிளாஸ் இருக்கும்.

“அரசுப் பள்ளியில் படிக்கும்போது கோச்சிங் மையங்களில் எதிலும் சேர்ந்து படிக்கவில்லை. அதற்கு உரிய வசதியும் எங்களது குடும்பத்துக்கும் இல்லை. நான் படித்த அரசுப் பள்ளியிலேயே வகுப்புகள் முடிந்ததும் ஸ்பெஷல் கிளாஸ் இருக்கும். நன்றாகப் படிக்கக்கூடிய மாணவர்களை பள்ளியிலே ஒரு மணி நேரம் கூடுதலாகத் தங்கவைத்துப் பாடங்களைப் படிக்கச் சொல்லுவார்கள். அத்துடன் டெஸ்ட் வைப்பார்கள். அதனால் என்னால் நன்றாகப் படிக்க முடிந்தது. எனது வீட்டுக்குப் பக்கத்தில் இருந்த ஆசிரியர் வெங்கடேன் சார்தான் எனக்கு வழிகாட்டி. அவரது வீட்டில் எனக்கு மட்டும் தனியே பாடங்களைச் சொல்லித் தந்து எனது சந்தேகங்களைப் போக்குவார். எப்படியாவது நன்கு படித்து வேலைக்குப் போய் விட வேண்டும் என்று ஊக்கப்படுத்துவார். இதற்காக எனது அப்பாவிடமும் பேசுவார். அகரம் பவுண்டேஷனில் படிக்க உதவி அளிக்கிறார்கள் என்ற தகவலைச் சொல்லியவரும் அவர்தான்” என்று நெஞ்சம் நெகிழ்கிறார் அரவிந்த்.

எனது பள்ளியின் முன்னாள் மாணவரான சவீதா பல்கலைக்கழக நிறுவனர் வீரையன், அந்த அரசுப் பள்ளியில் படித்து அதிக மதிப்பெண்கள் பெற்ற மூன்று மாணவர்களின் படிப்புச் செலவுக்காக உதவித் தொகை வழங்குவதாக அறிவித்திருந்தார். பள்ளியில் முதல் ரேங்க் பெற்ற மாணவன் நான் என்பதால் எனக்கு அவர் வழங்கிய ரூ.1 லட்சம் உதவித் தொகை எனது மேற்படிப்புச் செலவுக்காகக் கிடைத்தது.  

”பொறியியல் படிப்புகளில் சேருவதற்கான எனது கட் ஆப் மதிப்பெண்கள் 193.5. அந்த சமயம், கம்ப்யூட்டர் சயின்ஸ், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிக்கேஷன், மெக்கானிக்கல் போன்ற படிப்புகளில் சேருவதற்கே அதிக ஆர்வம் காட்டினார்கள். நாங்கள் இருந்த பகுதி டெக்ஸ்டைல் தொழில்கள் நிறைந்த பகுதி.  அதனால், வழக்கமான படிப்புகளைவிட்டுவிட்டு அப்பேரல் டெக்னாலஜி பி.டெக். படிப்பில் சேரலாம் என்று

அரவிந்த்

முடிவெடுத்தேன். கிண்டி பொறியல் கல்லூரியில் அந்தப் படிப்பில் இடம் கிடைத்தது. இந்த நிலையில், அகரம் பவுண்டேஷன் மூலம் படிப்பதற்கும் உதவி கிடைத்தது. அத்துடன், எனது பள்ளியின் முன்னாள் மாணவரான சவீதா பல்கலைக்கழக நிறுவனர் வீரையன், அந்த அரசுப் பள்ளியில் படித்து அதிக மதிப்பெண்கள் பெற்ற மூன்று மாணவர்களின் படிப்புச் செலவுக்காக உதவித் தொகை வழங்குவதாக அறிவித்திருந்தார். பள்ளியில் முதல் ரேங்க் பெற்ற மாணவன் நான்  என்பதால் எனக்கு அவர் வழங்கிய ரூ.1 லட்சம் உதவித் தொகை எனது மேற்படிப்புச் செலவுக்காகக் கிடைத்தது. அதனால் கல்லூரியில் எந்தவிதத் தடங்கலும் இல்லாமல் படிக்க முடிந்தது” என்கிறார் அவர்.

“ஆனாலும் தமிழ் வழியில் படித்து விட்டு கல்லூரியில் ஆங்கில வழியில் படிப்பதில் எனக்குப் பிரச்சினை ஏற்பட்டது. தொடக்க மாதங்களில் ஆசிரியர் நடத்தும் பாடங்கள் எனக்கு புரியாது. சக மாணவர்களிடம் சந்தேகங்களைக் கேட்டுத் தெரிந்து கொள்வேன். எனது ஆங்கில அறிவை மேம்படுத்திக் கொள்வதற்காக அகரம் பவுண்டேஷன் உதவியுடன் ஆங்கிலப் பயிற்சி பெற்றேன். அவர்கள் அளித்த பயிற்சி வகுப்புகள் எனக்குத் தன்னம்பிக்கையூட்டின. எனக்கு வகுப்புகள் புரிபடுவதற்கு ஓராண்டு ஆகிவிட்டது. 2014ஆம் ஆண்டில் பி.டெக். படிப்பில் 78 சதவீத மதிப்பெண்கள் பெற்று முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றேன். என்னைவிட மிகஅதிக மதிப்பெண்கள் பெற்ற பலர் எனது வகுப்பில் இருந்தனார். ஆனாலும்கூட, கேம்பஸ் பிளேஸ்மெண்ட் நடக்கும்போது எனக்குத்தான் முதலில் வேலை கிடைத்தது. மும்பையில் உள்ள அலோக் இன்டஸ்ட்ரீஸ் என்ற டெக்ஸ்டைல் தொழில் நிறுவனத்தில் டெக்னிக்கல் டெக்ஸ்டைல் பிரிவில் எனக்கு சீனியர் எக்ஸிகியூட்டிவ் வேலை கிடைத்தது. 2017இல் எனது தந்தையின் மரணத்திற்குப் பிறகு கோவைக்கு வந்துவிட்டேன். அங்கு உள்ள சிவா டெக்ஸ்யார்ன் நிறுவனத்தில் மார்க்கெட்டிங் மேனேஜராகப் பணிபுரிந்து வருகிறேன்” என்று கூறுகிறார் அரசுப் பள்ளியில் தமிழ் வழியில் படித்தாலும் சாதிக்க முடியும் என்று காட்டியுள்ள அரவிந்த்.


Share the Article

Read in : English